கால்நடை மருத்துவமனைகளுக்கு மருந்துகள் வாங்கியதில் ரூ. 10 கோடி ஊழல்
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவனைகளுக்கு மருந்துகள் வாங்கியதில் ரூ. 10 கோடி வரை ஊழல்நடந்துள்ளதாகத் தெரிகிறது.
போலி பில்கள் தயாரிக்கப்பட்டு இந்த ஊழல் நடந்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்ட கால்நடை மருத்துவமனைகளுக்கும் தேவைப்படும் அலோபதி, சித்த,ஹோமியோபதி மருந்துகளை தமிழக அரசின மருத்துவப் பணிக் கழகம் கொள்முதல் செய்துமருத்துவமனைகளுக்கு வினியோகித்து வந்தது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின் இந்த முறை மாற்றப்பட்டது. கால்நடை மருத்துவமனைகளுக்குத் தேவையானமருந்துகளை அந்தந்த மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளே வாங்கிக் கொள்ளலாம் என்று அதிகாரம்தரப்பட்டது. வாங்கிய மருந்துக்கான பில்களை மட்டும் மருத்துவப் பணிக் கழகத்துக்கு அனுப்பி வைத்தால் போதும்என்று அறிவிக்கப்பட்டது.
இங்கு தான் ஊழல் ஆரம்பித்தது. மருந்துகளை கொள்முதல் செய்ய அதிகாரம் பெற்ற மாவட்ட கால்நடைத்துறைஅதிகாரிகள், போலி பில்கள் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர்.
மேலும் மருந்துகளை சில நிறுவனங்களிடம் மட்டும் வாங்கி அவர்களுக்கு சாதமாகவும் செயல்பட்டுள்ளனர்.இதன்மூலம் அந்த நிறுவனங்களிடம் இருந்து ரூ. 1 கோடி வரை கமிஷனும் அடித்துள்ளனர்.
கால்நடைகளுக்கு இலவசமாக தர வேண்டிய மருத்துகளையும் படிப்படியாக பல மாவட்டங்களில் நிறுத்தியுள்ளனர்.இதன்மூலம் மருந்துகளையே வாங்காமல் வெறும் பில்கள் மட்டும் தயார் செய்து தலைமை அலுவலகத்துக்குஅனுப்பி வைத்து ரூ. 10 கோடி வரை சுருட்டியுள்ளனர்.
இந்த விவரம் தெரிய வந்ததையடுத்து துறைரீதியிலான விசாரணை நடந்தாகத் தெரிகிறது. அதில் ஊழல் நடந்ததுஉண்மை என்று தெரியவந்ததால் அப்படியே இந்த விஷயத்தை மூடி மறைக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.
இதன் முதல் கட்டமாக மருந்துகள் வாங்கும் உரிமை மாவட்ட கால்நடை அதிகாரிகளிடம் இருந்துபறிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மருந்துகளை மருத்துவப் பணிகள் கழகமே வாங்கி அனுப்பும் என்று புதிய உத்தரவை அரசுபிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் ஊழல் செய்த அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications