தமிழகத்தில் தொடர்கிறது மழை: மேலும் 2 நாட்கள் நீடிக்கும்
சென்னை:
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மீது மேக மூட்டத்தை உருவாக்கியுள்ளதால் தொடர்ந்து மழை பெய்யும் என சென்னைநுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வட கிழக்குப் பருவ மழையுடன் புயல் சின்னமும் உருவாகியிருப்பதால் கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும்கன மழை பெய்து வருகிறது.
இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அணைகளில் நீர் மட்டமும் வெகுவாகஉயர்ந்து வருகிறது. இந் நிலையில் மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் தவிர ஆந்திரா, கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது.
போரூர் அருகே ஜமால் என்பவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அதில் இடி மின்னல் தாக்கியதாகவும்அதில் செல்போன் கருகியதோடு, அவரது கையிலும் காதிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருபுவனம், நத்தத்தில் அதிக அளவாக 6 செ.மீ மழையும் குறைந்த அளவாக மதுரை,அருப்புக்கோட்டை, செங்குனறம், சிவகங்கை ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
இன்றும் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளும் வேகமாகநிரம்பி வருகின்றன. மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications