ராஜிவ் காந்தியிடம் கதறி அழுதவர் தான் ஜெயலலிதா: சுதர்சன நாச்சியப்பன்
சென்னை:
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ராஜிவ் காந்தியிடம் ஜெயலலிதா கதறி அழுதார் என காங்கிரஸ் எம்.பி சுதர்சனநாச்சியப்பன் கூறினார்.
சென்னையில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் சிவங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பியும், சில காலமாகஅதிமுகவை ஆதரித்து வந்தவருமான சுதர்சன நாச்சியப்பன் கூறியதாவது:
ஜெயலலிதா இன்று முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து இருப்பதற்குக் காரணமே மணிசங்கர அய்யர் தான். 1988ம்ஆண்டு அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா ஓரம்கட்டப்பட்டபோது, மணிசங்கர அய்யர் தான் அவரைஅழைத்துச் சென்று ராஜிவ் காந்தியிடம் அறிமுகப்படுத்தினார்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடந்த அந்தச் சந்திப்பின்போது, ராஜிவ் காந்தியிடம் கதறி அழுதார் இந்தஜெயலலிதா. அதன் பிறகு கட்சி நடத்த ஜெயலலிதாவுக்கு ரூ. 4 கோடி தந்தார் ராஜிவ் காந்தி. ஜெயலலிதாசிரமத்தில் இருந்தபோதெல்லாம் உதவியவர் மணிசங்கர அய்யர். காங்கிரசுடன் இருமுறை கூட்டணி அமைத்துத்தந்ததும் மணி தான்.
கருணாநிதியை சிறையில் தள்ளி ஜெயலலிதா அடாவடித்தனம் செய்தபோது, காங்கிரஸ் ஆதரவு தந்தால்ஜெயலலிதா அரசைக் கலைத்துவிடலாம் என்றது பா.ஜ.க. ஆனால், அப்போது லண்டனில் இருந்து சோனியாவிடம்பேசி ஆட்சிக் கலைப்புக்கு காங்கிரஸ் ஆதரவைத் தராமல் தடுத்தவர் மணிசங்கர அய்யர்.
சோனியாவைப் பற்றிப் பேச ஜெயலலிதாவுக்கு ஒரு தகுதியும் கிடையாது என்றார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது:
நாம் ஒரே அணியில் திரண்டால் ஜெயலலிதா என்ற ஊழிக் காற்றை ஊதித் தள்ளிவிடவாம். மற்ற கட்சி எம்.பி,எம்.எல்.ஏக்களை அதிமுகவினர் தாக்குவது புதிதல்ல. 1994ல் நான் தாக்கப்பட்டேன், ப.சிதம்பரம் தாக்கப்பட்டார்,இப்போது மணிசங்கர அய்யர்.
தற்போது 5 மாநில தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மணிசங்கர அய்யரை வைத்துக் கொண்டு சோனியா காந்தியைவிமர்சித்தும், காங்கிரஸை சவாலுக்கு இழுத்தும் ஜெயலலலிதா பேசியதன் பின்னணியைப் பார்க்க வேண்டும்.
தேர்தலை மனதில் கொண்டு திரிசூல் வியாபாரிகள் கொடுத்த தைரியத்தில் சோனியாவை சீண்டவே மணிசங்கரஅய்யரைத் தாக்கிப் பேசியுள்ளார் ஜெயலலிதா என்றார்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications