சசிகலா, மணிசங்கர் அய்யருக்கு சு.சுவாமி திட்டு
சென்னை:
காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் அய்யர் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ஜனதாகட்சித் தலைவர் சுப்ரமணியசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் நிருபர்களிடம் சுவாமி கூறியதாவது:
அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் தன்னைத் தாக்கியதாக மணிசங்கர் அய்யர் குற்றம் சாட்டுகிறார்.
ஆனால், ஜெயலலிதாவோ, காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசல்தான் இந்தத் தாக்குதலுக்குக் காரணம்என்கிறார். உண்மை எதுவென்று சிபிஐ விசாரித்தால்தான் தெரியும்.
நான் முதல்வரானால், ஜெயலலிதாவை குருவாயூர் கோவிலுக்குத் தானமாகக் கொடுப்பேன் என்று எழுதியமணிசங்கர் அய்யர் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்யவேண்டும். மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில்பேசுவதும், செயல்படுவதும் இந்திய குற்றவியல் சட்டம் 505வது பிரிவின் கீழ் கிரிமினல் குற்றமாகும்.
பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு அதிக அதிகாரம் வழங்கினால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடருவேன். குழுவிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கினாலும் மதிமுகவிற்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை.வைகோ மீதான வழக்கு நீதிமன்றத்தின் முன் உள்ளதால் பொடா மறு ஆய்வுக் குழு அதில் தலையிட முடியாது.
வரும் 30ம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த கமுதிக்குச்செல்கிறேன். அந்த நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வர மாட்டார். ஏனென்றால் அவருக்கு முத்துராமலிங்கத் தேவர்தெய்வமல்ல. சசிகலா தேவர் தான் அவருக்கு தெய்வம்.
எனது சொத்து நாட்டுக்கு என்று சொன்னவர் முத்துராமலிங்கத் தேவர். நாட்டு சொத்து எனக்கு என்று சொல்பவர்சசிகலா.
தடை செய்யப்பட்ட இயக்கமான எல்.டி.டி.ஈக்கு ஆதரவாகப் பேசியதால், வைகோ உள்ளிட்ட மதிமுக தலைவர்கள்கைது செய்யப்பட்டது சரியே. சோனியா காந்திக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளது. இதனால்,விடுதலைப் புலிகளின் நிர்பந்தம் காரணமாகவே, திமுகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முயலுகிறது.
தமிழ்நாட்டில் பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளைப் படிக்கக் கூடாது என்று கரும்பலகைஅறிவிப்புகளை திகவினர் வைத்துள்ளனர். அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications