அரசு ஊழியர்களுக்கு ஊசிப்போன தீபாவளி ஸ்வீட் !!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தீபாவளிக்காக அரசு ஊழியர்களுக்கு நாள்பட்ட பலகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மத்தியில்கடும் அதிருப்தி பரவியுள்ளது.

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு கடன் வழங்குவதற்காக அந்தந்த அரசு அலுவலகங்களுக்கென சிக்கனமற்றும் கடன் கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உறுப்பினர்களாக உள்ள அரசுஊழியர்களுக்கு வருடாவருடம் தீபாவளிக்கு ஸ்வீட்கள் வழங்கப்படும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை அகர்வால் , ஆரியபவன் போன்ற பிரபல ஹோட்டல்களின் பலகாரங்கள்வழங்கப்பட்டு வந்தன.

ஆனால், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி குறைந்த விலையிலான ஸ்வீட்களை ஆவின் நிறுவனத்திடம்இருந்தே வாங்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்தது. இது கடந்த சிலஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளிக்காக அரசு பொது மருத்துவமனை, பொதுப் பணித்துறை, மாநகராட்சி மற்றும் குடிநீர்வாரிய ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டுட்டன.

இவற்றை வாங்கிப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியில் ஆழந்தனர். உண்ணவே தகுதியில்லா ஊசிப் போனஸ்வீட்களாக அவை உள்ளன.

நீண்ட நாள்களாக விற்காமல் தேங்கிய ஸ்வீட்களை ஆவின் நிறுவனம் அரசு ஊழியர்களின் தலையில் கட்டிவிட்டுள்ளதாகத் தெரிதிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+