மனம் திருந்திய எம்.எல்.ஏ.வுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
சென்னை:
சென்னை, புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதி ப.சிதம்பரம் கட்சி எம்.எல்.ஏ. ரங்கநாதன், காந்தி புத்தகங்களைப்படித்து மனம் திருந்தியதற்காக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்து, அவரது முன் ஜாமீன் மனு மீதானநிபந்தனையை தளர்த்தியது.
நிலத் தகராறு காரணமாக புரசைவாக்கம் ரங்கநாதன் மீது போலீஸில் புகார் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்துமுன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை ரங்கநாதன் அணுகினார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகற்பகவிநாயகம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநதி மீது இப்படிப்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டு எழுந்திருப்பதுவருத்தம் தருகிறது.
எனவே, ரங்கநாதன் மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு ஒரு வாரம் சென்று காந்தியடிகள் எழுதியசத்தியசோதனை உள்ளிட்ட புத்தகங்களைப் படிக்க வேண்டும். அதன் பிறகு சென்னையில் உள்ள தக்கர் பாபாவித்யாலயா நூலகத்தில் தினசரி காந்தியடிகளின் புத்தகங்களை படிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து முன்ஜாமீன் வழங்கினார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மற்றும் சென்னையில் காந்தி புத்தகங்களைப் படித்தார் ரங்கநாதன்.இதைத் தொடர்ந்து தனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையைத் தளர்த்துமாறு கோரி நீதிமன்றத்தை அணுகினார்ரங்கநாதன்.
அவர் தாக்கல் செய்த மனுவில், காந்தியடிகளின் சிந்தனைகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டன. இந்தியஜனநாயகத்தை கட்டிக் காக்க விரும்பும் ஒவ்வொருவரும் காந்தியடிகளின் புத்தகத்தைப் படிக்க வேண்டும்.காந்தியடிகளின் புத்தகங்களைப் படித்ததன் மூலம் எனக்குக் கிடைத்த ஞானத்தை எனது வாழ்நாள் முழுவதும்கடைப்பிடிப்பேன் என்று கூறியிருந்தார் ரங்கநாதன்.
மனுவைப் பரிசீலித்த நீதிபதி கற்பகவிநாயகம், மனுதாரர் நிபந்தனைகளை சரியான முறையில்கடைப்பிடித்திருப்பது அறிந்து திருப்தி அடைகிறேன். நீதிமன்றம் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் அவர்சரியான முறையில் பின்பற்றியிருக்கிறார்.
நீதிமன்றம் உத்தரவிட்ட காலத்தில் மட்டும் காந்திப் புத்தகங்களைப் படிக்காமல், தொடர்ந்து காந்தியடிகளின்புத்தகங்களைப் படிக்க வேண்டும். அத்தோடு நாட்டின் புகழ் பெற்ற அரசியல் தலைவர்கள், எம்.பிக்கள், பிறதலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களையும் படிக்க வேண்டும்.
ஒரு இந்தியக் குடிமகனை, அதிலும் ஒரு எம்.எல்.ஏவை வன்முறை என்றால் என்ன, அதன் கொடுமைகள் என்னஎன்பதை, காந்தியடிகளின் புத்தகங்கள் மூலம் விளக்க முடிந்ததற்காக இந்த நீதிமன்றம் மகிழ்ச்சி அடைகிறது என்றுகூறிய நீதிபதி, ரங்கநாதனுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications