பொடா சட்ட திருத்தம் ஜெவுக்கு எதிரானதல்ல: பா.ஜ.க
டெல்லி:
பொடா மறு ஆய்வுக் கமிட்டிக்கு அதிக அதிகாரம் தரும் வகையில் அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும்முடிவு முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான நடவடிக்கை அல்ல என பாரதிய ஜனதா கட்சி விளக்கமளித்துள்ளது.
பொடா சட்டம் தமிழகத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் பயன்படுத்தப்படுவதாகக் கூறி தேசிய ஜனநாயகக்கூட்டணியின் முக்கிய கட்சியான திமுக, அதை வாபஸ் பெறக் கோரி நெருக்குதல் தந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து பொடாவைத் திருத்த அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படிநீதிபதி சர்க்காரியா தலைமையிலான பொடா மறு ஆய்வுக் குழுவிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். இக் குழுஎடுக்கும் முடிவிற்கு மத்திய மாநில அரசுகள் கட்டுப்பட வேண்டும்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவரை விடுவிக்கும் உரிமையும் இக் குழுவிற்கு உண்டு.
இந்த சட்டத் திருத்த அவசர பிரகடனம் ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என மத்திய உள்துறை செயலாளர்கோபாலசாமி கூறியுள்ளார்.
இந் நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக அரசுக்கோ, முதல்வர் ஜெயலலிதாவுக்கோ எதிராகஎடுக்கப்பட்டது அல்ல என பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
டெல்லியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் விதமாகஅதில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை பாரதிய ஜனதா வலியுறுத்திவந்தது.
தற்போது மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள திருத்தம், பொடா சட்டம் தவறாகப்பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனை பாரதிய ஜனதா முழு மனதுடன்வரவேற்கிறது.
இச் சட்டம் ஜெயலலிதாவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டதல்ல. அரசியல் உள்நோக்கமின்றி, பொடா சட்டம்பயன்படுத்தப்படவேண்டும் என்பதற்காகவே இது கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications