மூத்த கன்னியஸ்திரியின் கள்ளத் தொடர்பு: நேரில் பார்த்த தமிழக கன்னியாஸ்திரியை கொல்ல முயற்சி
சென்னை:
மூத்த கன்னியாஸ்திரியும், கார் டிரைவரும் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை நேரில் பார்த்த மற்றொருகன்னியாஸ்திரியைக் கொல்ல முயற்சி நடந்தது.
மூன்றாவது மாடியிலிருந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் உயிர் பிழைத்துவிட்டாலும் கூட அவரதுதண்டுவடம் பாதிக்கப்பட்டு, கால்கள் செயலிழந்தன.
கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூரைச் சேர்ந்தவர் கரோலின் புஷ்பராணி(23). கன்னியஸ்திரியான இவர்ஆந்திராவிலுள்ள கொண்டரமல்லேபள்ளி என்ற இடத்தில் உள்ள விஜயாமேரி கான்வென்டில் உதவி வார்டனாகப்பணிபுரிந்து வந்தார்.
அங்கு மூத்த கன்னியாஸ்திரியாக இருப்பவர் ரெமிஜிஸ், அவருக்கும் கார் டிரைவர் கேசவன் என்பவருக்கும் நீண்டகாலமாக முறைகேடான உறவு இருந்து வருவதாகத் தெரிகிறது.
சமீபத்தில் அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை கரோலின் பார்த்துவிட்டார். அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து கான்வென்டின செயலாளர் ரோசாரி மதரிடம் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து ரெமிஜஸிடம், ரோசாரி விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
இந் நிலையில் வழக்கம்போல் காலை 5 மணிக்கு தனது அறையில் இருந்து எழுந்த கரோலின், மொட்டை மாடியில்உலர வைத்திருந்த துணிகளை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, அவரைத் தொடர்ந்து வந்த ரெமிஜிஸூம்,டிரைவர் கேசவனும், அவரை மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர்.
இதில் கரோலினின் தண்டுவடம் உடைந்தது. இதனால் இரு கால்களும் செயலிழந்துள்ளன. இதையடுத்து அவர்சென்னை கொண்டு வரப்பட்டு விஜயா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது சென்னை அரசுமருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக சென்னை மனித உரிமை ஆணையத்தில் கரோலின் புகார் கொடுத்துள்ளார். ஆனால், கரோலின்சொல்லும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று கான்வென்ட் முதல்வர் கூறியுள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications