டெல்லி திரும்பினார் கலாம்: இரு நாட்களில் பொடா சட்ட திருத்தம்
டெல்லி:
ஜனாதிபதி அப்துல் கலாம் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பினார்.இதையடுத்து பொடா திருத்தம் குறித்த அவசரச் சட்டம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின் முதன்முறையாக யு.ஏ.இ, சூடான், பல்கேரியா ஆகிய நாடுகளில் ஒரு வாரகாலம் சுற்றுப் பயணம் மேற்கொண்ட கலாம் இன்று காலை டெல்லி திரும்பினார்.
அவரைத் துணைப் பிரதமர் அத்வானி, கேபினட் செயலாளர் கமால் பாண்டே, உள்துறைச் செயலாளர் கோபாலசுவாமி, முப்படைகளின் தலைவர்கள் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
வெல்கம் பேக் டு இந்தியா என்று சொல்லி அத்வானி கை கொடுக்க, அவரது கைகளை இறுகப் பற்றி சிரித்தவாரேகை குலுக்கினார் கலாம்.
பொடா மறு ஆய்வுக் கமிட்டியின் உத்தரவுகளை மாநில அரசுகள் நிறைவேற்றும் வகையில் அதற்கு அதிகஅதிகாரம் தர மத்திய அரசு கடந்த 21ம் தேதி முடிவு செய்தது. ஜனாதிபதி நாடு திரும்பிய பின் இது தொடர்பானஅவசர சட்டத் திருத்த உத்தரவை வெளியிடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு திரும்பிய கலம், இரண்டு நாட்களில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.
பொடா சட்டத் திருத்தம் எல்லாம் தேவையில்லை, அந்தச் சட்டமே நீக்கப்பட வேண்டும் என்பதில் திமுக தீவிரமாகஉள்ளது. திமுகவின் நெருக்குதலால் தான் இந்த சட்டத் திருத்தத்தையே மத்திய அரசு கொண்டு வர முடிவு செய்தது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications