இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு விடுதலைப்புலிகள் அழைப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
முதன்முறையாக விடுதலைப்புலிகள் அமைப்பு, கடந்த காலத்தில் வெகு சமீபமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்குக்குடியேறிய தமிழர்களை அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளமாறு அழைப்பு விடுத்திருக்கறது.
விடுதலைப்புலிகள் அமைப்பு, 6 ஆண்டுகளுக்கு தாங்கள் நடத்த விரும்பும் இடைக்கால நிர்வாகக் குழுவில்பங்குபெற வருமாறு, இந்தய வம்சாவளித் தமிழர்களை அழைத்துள்ளது,
100 பேர் கொண்ட இடைக்கால நிர்வாகக் குழுவில் வடக்கு மற்றும் கிழக்கு என இரு பகுதிகளிலிருந்தும், தலா 50பேர் இடம்பெற வேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.
மேலும், அக்குழுவில் 25 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் எனவும் புலிகள் அமைப்புகூறியுள்ளது.












Click it and Unblock the Notifications