மெரினா கடற்கரையில் இருந்த குடிநீர்க்கிணறு மூடல்: மீனவர்கள் கொந்தளிப்பு
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் இருந்த குடிநீர்க்கிணறு மூடப்பட்டதை எதிர்த்து மீனவர்கள் போராட்டம்நடத்தினர்.
மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இதில் ஒருகட்டமாக பல காலமாக இருந்து வந்த சீரணி அரங்க மேடை நள்ளிரவில் இடித்துத் தள்ளப்பட்டது. அதேபோல,சில ஹோட்டல்களும் இடிக்கப்பட்டன.
இந்நிலையில் மெரினா கடற்கரையில் இருந்த கிணறும் சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. சீரணி அரங்கம்இருந்த இடத்திற்கு அருகே இந்த கிணறு உள்ளது. இந்த கிணற்று நீரைத்தான் குடிப்பதற்கும், குளிப்பதற்கும்,உடைகளைத் துவைப்பதற்கும் அருகே உள்ள மட்டன்குப்பம் காலனி மீனவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கிணறு மூடப்பட்டதை எதிர்த்து அவர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து கிணறு மீண்டும்திறக்கப்பட்டது. இந்த நிலையில் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிணற்றை மூட மாநகராட்சிஊழியர்கள் வந்தனர். இதையடுத்து மீனவர்கள் அங்கு திரண்டு வந்து மாநகராட்சி ஊழியர்களுடன் தகராறுசெய்தனர். கிணற்றை மூட விட மாட்டோம் என்று அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே, சீரணி அரங்கத்திற்கு, காமராஜர் சாலையிலிருந்து செல்வதற்காக கடற்கரை மணலில்போடப்பட்டிருந்த தார்ச் சாலையை இடிக்கத் தொடங்கியுள்ளனர் மாநகராட்சி ஊழியர்கள். இந்த சாலை முற்றிலும்அகற்றப்பட்டு விடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications