மீண்டும் புயல் சின்னம்: தமிழகத்தில் மழை வலுக்கும் !
சென்னை:
வங்கக்கடலில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகும் வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் கன மழை தொடரும்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக தென்மேற்குப்பருவ மழையும் வடகிழக்குப் பருவ மழையும் பொய்த்ததால் தமிழகத்தில்கடும் வறட்சி நிலவியது.
ஆனால், இந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழை சற்று தாமதமாக அக்டோபர் 20ம் தேதி தொடங்கியிருந்தாலும்இரு நாட்களிலேயே மாநிலம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. இதையடுத்து மேட்டூர் அணையின்நீர்மட்டம் 62 அடியாக உயர்ந்துள்ளது.
மழையால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் நடவுப்பணிகளைத் துரிதப்படுத்தினர். மேட்டூர் அணையிலிருந்துதிறந்து விடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது.
இந் நிலையில் வங்கக் கடலில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே உருவான குறைந்த காற்றழுத்தமண்டலம் காரணமாக மழை வலுத்தது. நேற்று முன்தினம் இந்த புயல் சின்னம் வட ஆந்திரா நோக்கி நகர்ந்துஒரிஸ்ஸாவில் மையம் கொண்டது. இதனால் வடகிழக்குப் பருவமழையின் வேகம் குறைந்தது.
இதற்கிடையே, வங்கக் கடலில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகி, அது தமிழகத்தை நோக்கி நகரும் வாய்ப்புஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. இதனால் மீண்டும் தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழையின் வேகம் அதிகரிக்கும்.
இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும். சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்தகாற்றுடன் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடைமடையை அடைந்தது காவிரி நீர்!
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், கடைமடைப் பகுதியான (காவிரி ஆற்றுக்கால்வாய்கள் முடியும் இடம்) நாகைக்கு வந்துள்ளதால், அம் மாவட்ட விவசாயிகள் தங்களது விவசாயப்பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
கடந்த 7ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர், 11ம் தேதி கல்லணையிலிருந்துதண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் காவிரிப் பாசனப் பகுதியின் கடைசி பகுதியான கடைமடைக்குவந்து சேர்ந்துள்ளது. மேலும், வெண்ணாறு பாசனப் பகுதி கால்வாய்க்கும் காவிரி நீர் சென்றுள்ளது.
இதையடுத்து கடைமடைப் பாசனப் பகுதியான நாகை மாவட்டத்தில் 52,000 ஹெக்டேர் நேரடிப் பாசன நிலங்கள்மற்றும் பிற நிலங்களில் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்தில் பெய்த நல்ல மழை காரணமாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பாசனத்தில்ஈடுபட்டுள்ளனர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications