திமுக-காங்கிரஸ்கூட்டணிக்கு ரஜினி முயற்சி!
சென்னை:
காங்கிரஸ், திமுக கூட்டணி அமைவதற்கான அஸ்திவாரம் பெங்களூரில் போடப்பட்டு வருகிறது.
இக்கூட்டணியே அமைய வேண்டுமென கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும், நடிகர் ரஜினிகாந்தும் விரும்புவதால்ரஜினியே பெங்களூரில் முகாமிட்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இருந்தாலும் எந்த நேரத்திலும் வெளியில் வரத் தயாராகத்தான்உள்ளது. மணிசங்கர ஐயர் தாக்கப்பட்ட விவகாரத்துக்குப் பின் காங்கிரஸ் கட்சியினர் பெரும்பாலானோர் திமுகவுடன் கூட்டணி வைப்பதையே விரும்புகின்றனர்.
இதற்குக் காரணம் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது அதிருப்தியில்இருப்பதுதான்.பல்வேறு விஷயங்களில் கர்நாடக முதல்வருடன் மோதிய ஜெயலலிதா, சோனியாவையும்விமர்சித்ததால், அவருக்கு எதிராகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் கிருஷ்ணா உள்ளார்.
வீரப்பன் விவகாரத்தில் கிருஷ்ணாவுக்கும் கருணாநிதிக்கும் எதிராக கர்நாடக முன்னாள் டி.ஜி.பி., தினகர் எழுதியபுத்தகமும் இவர்கள் இருவரும் நெருங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது.
அதை வைத்து இந்த இருவரையும் மடக்க முயற்சிக்கும் ஜெயலலிதாவை வீழ்த்துவதற்காக திமுக வுடன் கூட்டணிசேர கிருஷ்ணா முடிவு செய்துள்ளார். இதற்கு சோனியாவும் சம்மதித்ததையடுத்து கூட்டணிக்கான பேச்சு வார்த்தைதுவக்கப்பட்டது.
நடிகர் ரஜினி காந்தும் இக்கூட்டணி உருவாக்கத்தில் ஆர்வமாக உள்ளார். பாரதிய ஜனதாவுடன் ஜெயலலிதாநெருங்கி வருவதாலும், தமிழகத்திலுள்ள பாரதிய ஜனதாவினர் திமுகவை ஏற்றுக்கொள்ளத் தயாராகஇல்லாததாலும், காங்கிரஸூடன் திமுக கூட்டணி வைத்தால்தான் ஜெயலலிதாவை வீழ்த்த முடியும் என ரஜினிகருதுகிறார்.
மேலும் இக்கூட்டணியால் கர்நாடகத்தில் நடக்கும் தேர்தல்களில் திமுக வுக்கு கணிசமான இடங்களைக் கேட்டுப்பெற முடியும் என கருணாநிதியும் முடிவு செய்துள்ளார்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications