சேலம் அருகே ஜாதி மோதல்: 40 பேர் கைது
சேலம்:
சேலம் மாவட்டம் வென்னந்தூர் என்ற இடத்தில் முதலியார் மற்றும் வன்னியர் பிரிவைச் சேர்ந்தவர்களிடையேஏற்பட்ட கோஷ்டி மோதலில் 7 பேர் காயமடைந்தனர். 25 வீடுகள் தாக்கப்பட்டன. சில கடைகள், வாகனங்கள்சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக 40 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வென்னந்தூர் பகுதியில் ஏராளமான விசைத் தறி மையங்கள் உள்ளன. இவற்றை முதலியார் வகுப்பைச்சேர்ந்தவர்கள் வைத்துள்ளனர். இந்த தறி மையங்களில், வேலை பார்ப்பவர்கள் வன்னியர் வகுப்பைச்சேர்ந்தவர்கள் ஆவர். இரு வகுப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கமானது.
இந்த பின்னணியில், வென்னந்தூர் கிராமத்தில் தீபாவளியன்று பட்டாசு கொளுத்துவதில் இரு ஜாதியினருக்கும்இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு பிரிவினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில்,பஞ்சாயத்து கவுன்சிலர் சிங்காரவேலு, முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சுவாமிநாதன் ஆகியோர் உள்ளிட்ட 7பேர் காயமடைந்தனர்.
வீடுகள், வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மோதல் குறித்து அறிந்ததும் மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் பொன்.மாணிக்க வேல் உத்தரவின் பேரில் போலீஸார் விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட 40பேரைக் கைது செய்தனர்.
இந்த மோதல் தொடர்பாக வென்னந்தூர், மின்னக்கல் ஆகிய கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது. அங்கு ஆயுதம்ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications