இடைக்கால நிர்வாகத்தில் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும் பிரதிநித்துவம்: புலிகள்
கொழும்பு:
வட-கிழக்கில் அமையவுள்ள இடைக்கால நிர்வாகத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் பிரதிநிதித்துவம்அளிக்க விடுதலைப் புலிகள் இயக்கம் முன் வந்துள்ளது. இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இதுமுக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது.
அதிகாரப் பகிர்வு குறித்த தங்களது புதிய திட்டத்தில் விடுதலைப் புலிகள் இதனைத் தெரிவித்துள்ளதாக செய்திகள்வருகின்றன.
புலிகளின் திட்டத்தில் இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
வட கிழக்கில் 100 பேர் கொண்ட இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்கலாம். அதில், வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களிலிருந்து தலா 50 பேர் இடம்பெற வேண்டும் .அக்குழுவில் 25 சதவீத இடங்கள் பெண்களுக்குஒதுக்கப்படவேண்டும்.
மக்கள் தொகை அடிப்படையில், அனைத்து இனத்தவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.
நிர்வாகக் குழுவுக்கு 20 பேர் கொண்ட காபினெட் அமைச்சரவை தலைமை வகிக்க வேண்டும். அதில் வடக்குமற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து தலா 10 பேர் இடம் பெற வேண்டும்.
6 ஆண்டுகளுக்குள் முழுமையான, நிரந்தரமான அதிகாரப் பகிர்வுக்கு வழி வகுக்கும் வகையில் புதிய அரசியல்சாசனத்தை இலங்கை அரசு உருவாக்க வேண்டும்.
அதுவரை ஆயுதங்களை நாங்கள் கைவிட மாட்டோம். எங்களது ராணுவப் பிரிவும் கலைக்கப்படாது.
இடைக்கால ஆட்சியில் விடுதலைப் புலிகள், கடற்புலிகள் மற்றும் ராணுவம் ஆகியவை எவ்வாறு இயங்கவேண்டும் என்று தனியான விதிமுறைகளை வகுத்துக் கொண்டு, அதன்படி செயல்படலாம்.
இவ்வாறு புலிகள் தங்களது புதிய திட்டத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. புலிகளின் கோரிக்கைகள்நியாயமானவையாக இருப்பதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புலிகளின் யோசனைகளைஇலங்கை அரசின் தலைமை அமைதிப் பேச்சாளரும் அமைச்சருமான பெரிஸ் பாராட்டியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications