தேவர் ஜெயந்தி: மதுரையில் திரிசூலம் வினியோகிக்க தொகாடியா திட்டம்
மதுரை:
முத்துராலிங்கத் தேவர் பிறந்தநாளையொட்டி வரும் 30ம் தேதி, மதுரை நகரில் ஊர்வலம் நடத்த 9அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க உள்ள வி.எச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா மதுரையில் திரிசூலங்களைவினியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 96 வது பிறந்த நாள் விழாவும், 40 வது குரு பூஜையும் தமிழகத்தில்கொண்டாடப்படவுள்ளது.
அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் பல்வேறு அமைப்புகளின்தலைவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் தொகாடியாவும் இந் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
பின்னர் அவர் மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு திரிசூலம் வழங்குவார் என பாரதீய பார்வாடுபிளாக் கட்சியின் தலைவர் கே.ஏ.முருகன் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு அரசு அனுமதி தருமா என்றுதெரியவில்லை.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகன்,
மதுரையில் தொகாடியா திரிசூலம் வழங்கும் நிகழ்ச்சிக்கு இதுவரை அனுமது கோரவில்லை.
தேவர் ஜெயந்தியன்று அகில இந்திய பார்வர்ட் பிளாக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 9 அமைப்புகள்மதுரையில் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊர்வலத்திற்கு வருபவர்கள் ஆயுதங்கள், கல், கம்பு, சோடா பாட்டில் போன்றவற்றை எடுத்துச் செல்லக்கூடாது.ஊர்வலத்திற்கு வருபவர்கள் வாகனங்களில் மேற்கூரையில் அமரக்கூடாது. வாகனங்களில் ஒலிப் பொருக்கியைபயன்படுத்தக் கூடாது.
கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலையிலிருந்து பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கோ அல்லது பொதுக்கூட்ட இடத்திலிருந்து சிலை வரைக்குமோ இவர்கள் ஊர்வலம் நடத்திக் கொள்ளலாம்.
ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு தனித்தனி வழிகள் மற்றும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப்பாதைகள் மற்றும் இடங்களை மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்த வேண்டும்.
பாதுகாப்புக்காக மதுரையில் முழுவதிலும் 1,600 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இது தவிர 23நடமாடும் போலீஸ் படைகளும், துப்பாக்கி ஏந்திய போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
மருத்துவ குழுக்கள், ஆம்புலன்ஸுகள் ஆகியவை மதுரை நகரின் முக்கிய இடங்களில் நிறுத்தி வைக்கப்படும்என்றார்.
தேவர் ஜெயந்தியன்று மதுரை நகரில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படாது என்றும் வழக்கம் போல அவைஇயங்கும் என்றும் ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேவர் ஜெயந்தியன்று மதுரையில் வன்முறை நடப்பது வழக்கமாகிவிட்டதால் இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் தொகாடியாவும் வருவதால் பெரும் பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது.
ராஜஸ்தான் மற்றும் பீகாரில் இது போல திரிசூலம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்த தொகாடியாவுக்கு அந்த மாநிலஅரசுகள் அனுமதி மறுத்தன. மாநிலத்துக்குள் நுழைந்த அவரை கைது செய்து வெளியே அனுப்பின.
ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. தலைவர்களிடம் நெருக்கமாக உள்ள முதல்வர் ஜெயலலிதா, மதுரையில் தொகாடியாதிரிசூல வினியோக நிகழ்ச்சி நடத்த அனுமதி தருவார் என்று ஒரு தரப்பினர் நம்புகின்றனர்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications