பார்களில் விஸ்கி, பிராந்தியை இனி அரசே விற்கும் !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் விஸ்கி, பிராந்தி உள்பட உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளை இனிமேல்தமிழக அரசே விற்பனை செய்யவுள்ளது. இதற்காக அரசே பார்களையும் திறக்கவுள்ளது.

விஸ்கி, பிராந்தி போன்றவற்றின் விற்பனையை தனியாரின் பிடியிலிருந்து விடுவிக்கும் பொருட்டே இந்த அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவையடுத்து மாநிலம் முழுவதிலும் உள்ள மதுக் கடைகள் (ஒயின் ஷாப்) மூடப்படும் நிலைஏற்பட்டுள்ளது.

இனிமேல் அரசுக்குச் சொந்தமான டாஸ்மார்க் கூட்டுறவு நிறுவனமும், அதன் துணை நிறுவனங்களும், நுகர்பொருள்வாணிபக் கழகமும் மது விற்பனையை தமிழகத்தில் நடத்தும்.

மேலும் தனியார் மதுபானக் கடைகளில் பார் வசதியையும் ரத்து செய்ய முடிவு செய்துவிட்ட அரசு, இனிமேல்டாஸ்மாக் நடத்தப் போகும் மது பானக் கடைகளிலேயே பார் வசதியை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

இதற்காக சுகாதாரமான முறையில் பார்களை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

சில்லறை மது விற்பனையில், தனியார் செய்யும் பல்வேறு முறைகேடுகளைத் தடுக்கவும், அரசுக்கு வருவாயைஅதிகரிக்கும் நோக்கத்திலும் இந்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் மதுக் கடைகளை ஏலம் விடுவதிலும் பெரும் குழப்பம் நிலவி வந்தது. மதுக் கடை ஏலம் விடப்பட்டால்,கடைக்காரக்கள் கூட்டணி சேர்ந்து கொண்டு அடிமாட்டு விலைக்கு கடைகளை ஏலத்துக்கு எடுத்து அரசுக்கு பெரும்நஷ்டத்தை ஏற்படுத்தி வந்தனர்.

பெரும்பாலும் அதிமுக, திமுக, பா.ம.க., காங்கிரஸ் புள்ளிகள், அவர்களது பினாமிகள் வசம் தான் மதுபானக்கடைகள் உள்ளன. கட்சி வெவ்வேறாக இருந்தாலும், ஏலம் என்று வரும்போது இவர்கள் ஒருவரோடு ஒருவர்கூட்டணி வைத்துக் கொண்டு ஏலத் தொகை அதிகரித்துவிடாமல் பார்த்துக் கொள்வது வழக்கம்.

இதனால், அரசுக்கு ஏலம் மூலம் மிகக் குறைவான தொகையே கிடைத்து வந்தது.

இந் நிலையில் இந்த திருட்டுக் கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் வகையில் மதுபானக் கடைகளின் ஏலத்தைஅரசு ரத்து செய்துள்ளது.

அரசின் இந்த அதிரடி முடிவால் தமிழகம் முழுவதிலும் உள்ள பிராந்திக் கடை உரிமையாளர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். சென்னை நகர ஒயின் விற்பனையாளர் சங்கத்தின் அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலைநடந்தது.

அப்போது அரசின் அதிரடி முடிவுக்கு கடும் கண்டனம் தெவிக்கப்பட்டது. உரிமம் கொடுப்பதாக கூறி பல லட்சம்ரூபாய் அளவுக்கு டெபாசிட் வசூல் செய்த பின்னர் இதுபோன்ற அவசர சட்டத்தைப் பிறப்பித்துள்ளது தங்களுக்குபெரும் அதிர்ச்சி தருவதாக மது விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

2004ம் ஆண்டு வரை தற்போதுள்ள உரிமத்தின் கீழ் கடைகளை நடத்தலாம் என்று அரசு ஏற்கனவே கூறியுள்ளது.இதை நம்பி கடைகளின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் வாடைக்காக பல லட்சம் அளவுக்கு செலவு செய்துள்ளநிலையில் இதுபோன்ற அறிவிப்பு தங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று மது விற்பனையாளர்கள்புலம்புகிறார்கள்.

எதிர்த்து வழக்கு:

சில்லறை மதுபான விற்பனையை அரசே நடத்துவது என்று பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை எதிர்த்துகோவையைச் சேர்ந்த மதுபான வியாபாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், அரசின் அவசரச் சட்டம் தன்னிச்சையானது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. உயர்நீதிமன்றம் மற்றும்உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின்படி 2004ம் ஆண்டு வரை எனது மது பான உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ளும் உரிமை உண்டு. ஆனால் அரசின் அவரசச் சட்டம் நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதாக உள்ளது.

எனவே இந்த அவசரச் சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோயுள்ளார். இந்த மனு நாளைமறுநாள் நீதிபதி கோவிந்தராஜன் முன் பரிசீலனைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+