அதிமுக கிளைச் செயலாளர் கொலை: வீடுகளுக்கு தீ வைத்து அதிமுகவினர் அராஜகம்
பூந்தமல்லி:
பூந்தமல்லி அருகே, பஞ்சாயத்து தலைவியின் கணவர் காரில் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.இதையடுத்து நடந்த கலவரத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டது. ஒருவர் கத்தியால்குத்தப்பட்டார்.
காஞ்சிபுரம் குன்றத்தூர் தாலுகா, காலடிப்பேட்டை ஊராட்சி மன்றத்தின் தலைவியாக இருப்பவர் ரஞ்சிதம். இவரதுகணவர் அன்பு (49) காலடிப்பேட்டை கிளைச் அதிமுக செயலாளர் ஆவார். இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்ததிமுக செயலாளர் ஹரிக்கும் பஞ்சாயத்துத் தேர்தல் தொடர்பாக முன் பகை இருந்து வந்துள்ளது.
அன்புவைக் கொலை செய்ய முன்பொரு முறை முயன்றதாக ஹரியின் தம்பி வைரமுத்து கைது செய்யப்பட்டார்.அதன்பின் போலீஸார் இரு தரப்பினரைக்கும் இடையே சமாதானம் செய்து வைத்தனர்.
இந் நிலையில் அன்பு, தனது நண்பர் தயாளன் (50) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார், அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த மஞ்சள் நிற மாருதி வேன் ஒன்று, மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதனால் இருவரும் கீழே விழுந்தனர். தயாளன் பலத்த காயம் அடைந்தார்.
வேனில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல், அன்புவை வேனில் தூக்கிப் போட்டது. அப்போது அந்தவழியாக வந்த நாகேஸ்வர ராவ் என்பவர் அவர்களைத் தடுக்க முயன்றார், அவரை அரிவாளால் தாக்கிய கும்பல்அன்புவை காரில் கொண்டு சென்றது.
சிறிது தூரத்தில் பலத்த அரிவாள் வெட்டுக்களுடன் அன்பு பிணமான நிலையில் சாலையோரத்தில்கண்டெடுக்கப்பட்டார், இந்த செய்தி அறிந்ததும், அன்புவின் ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.குடிசைகளுக்குத் தீ வைத்தனர். இதில் 23 எரிந்து நாசமாயின. தனது வீட்டைக் காக்க முயன்ற கிருபாகரன்என்பவருக்குக் கத்திக்குத்து விழுந்தது.
மாவட்ட கலெக்டர் வெங்கடேசன், டி.எஸ்,பி, பன்னீர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கிருபாகரன், தயாளன் மற்றும் நாகேஸ்வர ராவ்ஆகியோருக்கு போரூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
விஜய்யின் 'நவீன் பட்நாயக் மாடல்' ஆட்சி.. அதிகாரிகளுக்கு தரப்பட்ட ஃப்ரீ ஹேண்ட்.. இதுதான் இனி ஸ்டைல்! -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம்











Click it and Unblock the Notifications