தலைமைச் செயலகம் கட்ட சுற்றுச்சூழல்துறை அனுமதி பெறவேண்டும்: மத்திய அரசு திடீர் உத்தரவு
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதைத் தடுக்கும் வகையில் புதியஉத்தரவு ஒன்றை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு மெரீனா கடற்கரையில் உள்ள ராணி மேரிக் கல்லூரியை இடித்துவிட்டு தலைைமச்செயகம் கட்ட முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்தார். இதை எதிர்த்து மாணவிகள் பெரும் போராட்டத்தில்இறங்கினர். இந் நிலையில் திமுக மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தனது சுற்றுச்சூழல் மற்றும் வன வனத்துறைஅமைச்சகத்தின் சார்பில் ஒரு உத்தரவைப் பிறப்பித்தார்.
அதில் கடலோரங்களில் புதிய கட்டடங்கள் கட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அத்தோடு பாரம்பரியகட்டடங்களை இடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ராணி மேரிக் கல்லூரி தப்பியது.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பல கட்டடங்களை இடித்துவிட்டு அங்கு தலைமைச்செயலகம் கட்ட ஜெயலலிதா முடிவு செய்தார். இதற்கு நாளை பூமி பூஜை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகபிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குஜெயலலிதா வந்து செல்வதற்காக பல லட்சம் செலவில் முக்கிய சாலையில் இருந்து துணைச் சாலை ஒன்றும்போடப்பட்டு வருகிறது.
இந்தப் பணிகள் துரிதகதியில் நடந்து வரும் நிலையில் ஒரு திடீர் உத்தரவை தற்போது சுற்றுச்சூழல் அமைச்சகம்வெளியிட்டுள்ளது. இது புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளை முடக்கிப் போடும் என்பதால் பரபரப்புஏற்பட்டுள்ளது.
டி.ஆர்.பாலுவின் அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு இதுதான்: நகர்ப்புறங்களில் மிகப் பெரிய அலுவலகவளாகங்கள், 1,000 பேருக்கு மேல் பணியாற்றும் கட்டடங்கள் போன்றவற்றிலிருந்து வெளியாகும்சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் நதிகள், நீர் நிலைகள் ஆகியவை மாசுபடுகின்றன.
எனவே நகர்ப்புறங்களில் மிகப் பெரிய அலுவலக வளாகங்கள் அமைக்கப்படும்போது அவற்றில் சுற்றுச்சூழல்ஆய்வு மேற்கொள்ளப்படுவது கட்டாயம். இதை உச்ச நீதிமன்றமே தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
எனவே, 1000 பேருக்கு மேல் பணியாற்றும் அலுவலக வளாகங்கள், ரூ. 50 கோடிக்கு மேலான கட்டுமானத்திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டும். சுற்றுச்சூழல்அமைச்சகத்தின் அனுமதி பெற்றால்தான் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒட்டியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய அரசாணை, தமிழக அரசைக் குறி வைத்தே பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலக பணிகளை இந்த அரசாணைதடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராணி மேரிக் கல்லூரி விவகாரத்திலேயே டி.ஆர்.பாலு மீது ஜெயலலிதா கடும் கோபத்தில் இருந்தார். சட்டசபையில்மிகவும் கடுமையாக பாலுவை விமர்சித்தார். தற்போது ஜெயலலிதா தீவிர ஆர்வம் காட்டி வரும் தலைமைச்செயலக பணிகளை முடக்கும் வகையில் வெளியாகியுள்ள இந்த அரசாணை புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலுவின் இந்த உத்தரவுக்கு பிரதமர் வாஜ்பாயின் பூரண ஆசியும் இருப்பதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.தன்னை தேவையில்லாமல் அலட்சியப்படுத்தி வரும் ஜெயலலிதாவுக்கு எதிராக பாலு எடுக்கும் முடிவுகளுக்குபிரதமர் பச்சைக் கொடி காட்டிவிட்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் தமிழக அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், திட்டமிட்டபடி தலைமைச் செயலக அடிக்கல்நாட்டு விழா நடைபெறும் என்றார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!












Click it and Unblock the Notifications