கலெக்டர்கள் மாநாடு: அடுத்த மாதம் சென்னையில்!
சென்னை:
வருடாந்திர இரண்டு நாள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாடுசென்னையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்களின் 2நாள் மாநாடு சென்னையில் நடைபெறும். இந்த ஆண்டு வரும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் மாநாடுநடைபெறவுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார்.
இந்த மாநாட்டின்போது முதலமைச்சரின் 15 அம்சத் திட்டங்களின் செயல்பாடுகள், முன்னேற்றங்கள், பல்வேறுவளர்ச்சிப் பணிகள், மதுக் கடைகளை அரசே ஏற்று நடத்துவது, மண் குவாரி பிரச்சினை, டாஸ்மாக் கடைகளில்பார் வசதியை ஏற்படுத்துவது, பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகளை விநியோகம் செய்வது, ரேஷன் கார்டுபுதுப்பிக்கும் பணி, விவசாய பம்புசெட்டுகளுக்கு மின்சார மீட்டர் பொருத்தும் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறுபிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
மாவட்டந்தோறும் சென்று வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஜெயலலிதா தஞ்சாவூருடன் தனதுமாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள மாநாட்டைகூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் ரூ. 2,942.48 கோடி மதிப்பிலான 1,34,954 புதிய திட்டங்களைதொடங்கி வைத்துள்ள முதல்வர் ஜெயலலிதா, ரூ. 4,140.67 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டியுள்ளார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications