தேவர் குருபூஜை: பசும்பொன் செல்ல ஜெயா திடீர் முடிவு
சென்னை:
தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள முதல்வர் ஜெயலலிதா நாளை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்கிராமத்திற்குச் செல்கிறார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினம் ஆகியவற்றையொட்டி நாளை அவர்பிறந்த ஊரான பசும்பொன்னில் அமைந்துள்ள நினைவிடத்தில் குருபூஜை நடைபெறவுள்ளது.
இதில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, வி.எச்.பி. துணைத் தலைவர் பிரவீன் தொகாடியா ஆகியோர்பங்கேற்கின்றனர். மேலும் பிற கட்சிகளின் முக்கியத் தலைவர்கள், தேவர் சமூக அமைப்பினர் கலந்துகொள்கின்றனர்.
இந் நிலையில் தானும் அங்கு செல்ல ஜெயலலிதா திடீர் என முடிவு செய்துள்ளார். காலம் காலமாக அதிமுவுக்குக்கிடைத்து வரும் தேவர் சமூகத்தினரின் வாக்குகளை தொகாடியா, மத்திய அமைச்சர்கள் திருநாவுக்கரசர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மூலம் பா.ஜ.கவும், சுப்பிரமணியம் சுவாமியும் குறி வைத்து வரும் நிலையில்ஜெயலலிதாவின் இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
வழக்கமாக தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதோடு நிறுத்திக் கொள்ளும் ஜெயலலிதா இந்த முறைகுருபூஜையிலும் பங்கேற்கிறார்.
நாளை காலை8 மணிக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ள புதிய தலைமைச்செயலகத்திற்கான பூமி பூஜையில் ஜெயலலிதா பங்கேற்கிறார். அதன் பின்னர் அவர் விமானம் மூலம் மதுரைசென்று பசும்பொன் செல்கிறார்.
மத்திய சுற்றுச்சூழல் துறையின் புதிய உத்தரவால் தலைைமச் செயலகம் கட்டுவதில் சிக்கல் வரும் என்றுஎதிர்பார்க்கப்படும் நிலையில் பூமி பூஜையை நடத்திட ஜெயலலிதா முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications