பண்ணையார் என்கெளன்டர்: ராமன் கமிஷனை புறக்கணிக்க நாடார்கள் முடிவு
சென்னை:
வெங்கடேச பண்ணையார் விவகாரத்தில் தமிழக அரசு நியமித்துள்ள ராமன் கமிஷனைப் புறக்கணிப்பதாகவும்,சி.பி.ஐ. விசாரணையே வேண்டும் என்றும் நாடார் சமுதாயப் பிரமுகர்கள் கோரியுள்ளனர்.
போலீஸாரால் வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றுகோரி கடந்த 20ம் தேதி நாடார் சமுதாய பிரமுகர்கள் முதல்வரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இாதயடுத்து இவ்வழக்கு தொடர்பாக ஒய்வு பெற்ற நீதிபதி ராமன் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்துமுதல்வர் உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் சென்னையில் நடந்த நாடார் சமுதாய பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் மத்தியஅமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப்பின் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது,
விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்று வருவதில் தனக்கு எந்தப் பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவேஎங்களை முதல்வர் அவசர, அவசரமாக அழைத்துப் பேசினார். அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும்மூத்த அதிகாரிகள் சில உறுதிமொழிகளைத் தந்து முதல்வரை சந்திக்க அழைத்தனர்.
நாங்களும் நம்பிக்கையோடு சென்றோம். ஆனால், எங்கள் நம்பிக்கையை சிதறிடித்துவிட்டார்கள்.பேச்சுவார்த்தைக்கும் அழைத்துவிட்டு, எங்கள் கோரிக்கைகளையும் ஏற்காமல் ஏமாற்றிவிட்டது அரசு என்றும்அவர்கள் கூறியுள்ளனர்.
வெங்கடேச பண்ணையார் மீது புகார் கொடுத்த சர்வதேச குற்றவாளியான சமீர், முன்னாள் தமிழக கவர்னர்பாத்திமா பீவிக்கு நெருக்கமானவர். அவரது தலையிட்டதால் காவல் துறையினர் வேகமாக நடவடிக்கை எடுத்துபண்ணையாரை சுட்டுக் கொன்றனர்.
தேச விரோத குற்றவாளிகள் சம்பந்தப்பட்டுள்ள இவ்வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைநடத்துவது பலனளிக்காது. இது போன்ற சமயங்களில் நியமிக்கப்பட்ட விசாரணைக்கமிஷன்களால் நீதியையும்,பாதுகாப்பையும் பெற்றுத்தர இயலுவதில்லை.
எனவே, தமிழக அரசு, சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்து அவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும். அத்துடன் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சமீர் பற்றிய குற்ற நடவடிக்கைகள் மற்றும் கொலையில்தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க ஏதுவாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்வர் அனுமதி அளிக்கவேண்டும். அப்போதுதான் தமிழக அரசு நியாயமாக நடந்து கொள்கிறது என்று மக்களால் நம்ப முடியும்.
தற்போது அரசு அறிவித்துள்ள ராமன் கமிஷன் வெறும் கண்துடைப்பு, உள் நோக்கம் கொண்டது. இதுகுற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சி என்றே நாங்கள் கருதுகிறோம். ஆகவே ராமனைப் புறக்கணிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications