தமிழகத்தின் விளக்கத்துக்கு காத்திருக்க முடியாது: நீதிபதி சகார்யா
டெல்லி:
வைகோ, நக்கீரன் கோபால் ஆகியோர் மீதான பொடா வழக்குகள் தொடர்பாக தமிழக அரசின் விளக்கத்துக்காககாத்திருக்க மாட்டோம் என பொடா மறு ஆய்வுக் குழுவின் தலைவரான நீதிபதி சகார்யா கூறியுள்ளார்.
இந்தக் குழுவுக்கு அதிக அதிகாரம் தரும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளதை சகார்யாவரவேற்றுள்ளார்.
முன்னதாக இந்தக் குழுவுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் ஏதும் தரப்படவில்லை. பொடா சட்டம் மாநில அரசுகளால்தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக இந்தக் குழு நினைத்தால் அது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைசெய்யலாம். முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் மட்டுமே இருந்தது.
இதனால், வைகோ, நெடுமாறன், நக்கீரன் கோபால் ஆகியோரின் வழக்குகள் தொடர்பாக இந்சக் குழு கடிதங்கள்அனுப்பியபோது தமிழக அரசு மதிக்காமல் நடந்து கொண்டது. கிட்டத்தட்ட 11 முறை இந்தக் குழு கடிதம்அனுப்பியபோதும், தமிழக அரசிடம் இருந்து, உங்கள் கடிதம் கிடைத்தது என்ற வெறும் அக்னாலெட்ஜ்மென்ட்மட்டுமே பதிலாக வந்தது.
இப்போது கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தால், இக் குழு எடுக்கும் முடிவுகளுக்கு மாநில அரசும், மத்தியஅரசும் கட்டுப்பட்டாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வைகோவை விடுவிக்க வேண்டும் என்று 300க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கையெழுத்திட்ட கடிதத்தை மதிமுகஇந்தக் குழுவிடம் தந்தது. இதை தமிழக அரசுக்கு அனுப்பி விளக்கம் கேட்டார் நீதிபதி சகார்யா.
அதற்கு மட்டும் தமிழக அரசிடம் இருந்து ஒரு பதில் வந்தது. அதில் திருமங்கலத்தில் வைகோ பேசியதன்மொழிபெயர்ப்பைக் கூட அனுப்பாமல், அவரது பேச்சை தமிழில் அனுப்பி வைத்தது தமிழக அரசு.
நீதிபதி சகார்யாவுக்கோ அல்லது இந்தக் குழுவில் உள்ள மற்ற நீதிபதிகளான இனாம்தார், ரஹ்மான்ஆகியோருக்கோ தமிழ் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவை தமிழக அரசு தொடர்ந்துதுச்சமாகவே மதித்து வந்தது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய நீதிபதி சகார்யா, மாநில அரசுகள் எங்களுக்கு உரிய விளக்கத்தைஅளிக்காவிட்டால் அதற்காக காத்திருக்க மாட்டோம். எங்களுக்குத் தேவையான ஆவணங்களைப் பெற வேறுவழிகள் உள்ளன. அதைக் கொண்டு விசாரிப்போம். விசாரணையில் முழு நேர்மை இருக்கும்.
வைகோ மற்றும் நக்கீரன் கோபால் விஷயத்தில் தமிழக அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும் பலன் இல்லை.இதனால், இனிமேலும் தமிழக அரசின் விளக்கத்துக்காக காத்திருக்க மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications