தொகாடியாவை மதுரைக்கு அழைத்து வரும் முருகன்ஜி !
மதுரை:
மதுரையில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி நடத்தும் கூட்டத்தில், தொண்டர்களுக்கு திரிசூலம் வழங்கப்படமாட்டாது என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது.
பசும்பொன் கிராமத்தில் நடைபெறவுள்ள தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விஸ்வ இந்து பரிஷத்தின்துணைத் தலைவர் பிரவீன் தொகாடியாவை, பாரதீய பார்வர்ட் பிளாக் கட்சி அழைத்துள்ளது. முருகன்ஜி (!)என்பவரின் தலைமையில் இயங்கும் இந்தக் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்து சமீபத்தில்பிரிந்தது. பா.ஜ.க. ஆதரவு கட்சியாக செயல்பட்டு வருகிறது.
தொகாடியாவை தேவர் குருபூஜைக்கு வரவழைத்து, கடவுள் பக்தி கொண்ட தேவர் சமூகத்தினரை, பா.ஜ.கவுக்குஆதரவாக திருப்புவதற்காகவே இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் இந்த முயற்சிகளைமேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேவர் குருபூஜைக்கு வரும் தொகாடியா பின்னர் பாரதீய பார்வர்ட் பிளாக் மதுரையில் ஏற்பாடு செய்துள்ளகூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார். அந்தக் கூட்டத்தில் 11 பாரதிய பார்வர்ட் பிளாக் தொண்டர்களுக்குதொகாடியா திரிசூலம் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
திரிசூலம் வழங்குவதற்கும், தொகாடியா வருவதற்கும் மதுரையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்தநிகழ்ச்சி மதுரைக் கூட்டத்தில் இடம்பெறாது என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது. மேலும் இதற்குகாவல்துறையும் தடை விதித்துவிட்டது.
இந் நிலையில் மதுரை செல்லும் வழியில் இன்று சென்னை வந்த தொகாடியா விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் தேர்தல்களில் இந்து மத நம்பிக்கைகளை மதிக்கும் கட்சிகளை வி.எச்.பி.ஆதரிக்கும். இந்து நம்பிக்கைகைள கேலி செய்யும் கட்சிகளை தோற்கச் செய்வோம்.
மதுரையில் நான் திரிசூலம வழங்க வரவில்லை. தேவர் ஜெயந்தியில் பங்க்ேவே வந்தேன். தேவர் சமூகவாக்குகளை வளைக்கவே நான் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்பதாகச் சொல்வது தவறு.
அயோத்தியில் கட்டாயம் ராமர் கோவில் கட்டப்படும். அந்த இடத்தை முஸ்லீம்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்.அது தொடர்பான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
வி.எச்.பி. மாநில ஒருங்கிணைப்பாளர் வீரபாபு இதுகுறித்துக் கூறுகையில், இந்த முறை மதுரைக் கூட்டத்தில்திரிசூலம் வழங்கப்படாது. இருப்பினும் விரைவில் மதுரையில் திரிசூல விழா நடைபெறும். தேவர் குரு பூஜைநிகழ்ச்சி என்பதால் அதில் திரிசூலம் வழங்கும் நிகழ்ச்சியை இணைக்க வேண்டாம் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது என்றார்.
காவல்துறையும், மாவட்ட நிர்வாகம் திரிசூலம் வழங்குவதற்குத் தடை விதித்திருந்தாலும் கூட தொகாடியாவின்பேச்சு மூலம், ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்ற அச்சம் மதுரையில் பரவியுள்ளது.
முஸ்லீம் முன்னேற்றக் கழகம் எதிர்ப்பு:
தமிழகத்திற்குள் விஸ்வ இந்து பரிஷத் துணைத் தலைவர் பிரவீன் தொகாடியாவை அனுமதிக்கக் கூடாது என்றுதமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ளஅறிக்கையில், தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள தொகாடியா அழைக்கப்பட்டுள்ளார். மேலும், திரிசூலம்வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதனால் பெரும் பதற்றம் உண்டாகும். அமைதிப் பூங்காவாக விளங்கி வரும் தமிழகத்தைக் காக்கும் வகையில்,தொகாடியாவை தமிழகத்திற்குள்ளேயே அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளது.
வழக்கமாகவே அதிமுகவுக்கு சாதகமான தேவர் சமூகத்தினரின் வாக்குகளை பா.ஜ.கவுக்கு ஆதரவாக வளைக்கதொகாடியா முயல்வதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் திரிசூலம் வழங்கும் நிகழ்ச்சிக்கு அரசு தடைவிதித்துவிட்டதாகவும் பேசப்படுகிறது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications