மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்தி வெறி: வைகோ கடும் கண்டனம்
சென்னை:
அரசுப் பணிகளில் சேர மத்திய தேர்வாணையம் (Staff Selection Commission) நடத்தும் தேர்வுகளில் தென்மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும், வட-கிழக்கு மாநில மாணவர்களும் பெரும் தோல்வி அடைந்துவருகின்றனர். இதற்கு அந்தத் தேர்வாணையத்தின் இந்தி வழித் தேர்வுகளும், இந்தியில் நடத்தப்படும் நேர்முகத்தேர்வுகளுமே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்வுகளை நாட்டின் தேசிய மொழிகள் அனைத்திலும் நடத்துமாறு பிரதமர் வாஜ்பாய்க்கு வைகோ கடிதம்எழுதியுள்ளார்.
அவரது கடித விவரம்:
பணியாளர் தேர்வாணையம் எழுத்துத் தேர்வின் போதும், நேர்முகத் தேர்வின் போதும் ஆங்கிலத்தையும்,இந்தியையும் மட்டுமே பயன்படுத்துகிறது.
இதனால் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் பெரும் வெற்றி பெறுகின்றனர். இந்தி மொழியைஉபயோகிக்காத பிற மாநில மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் நேர்முகத் தேர்வுகளை இந்தியிலேயே முடித்து தேர்வு முடிவுகளையும் அவசரமாக வெளியிடுகிறதுபணியாளர் தேர்வாணையம்.
இதன் காரணமாக தென் மாநிலங்களிலிருந்தும், வட கிழக்கில் இருந்தும் மிகச் சில மாணவர்களே பணிகளுக்குத்தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுதுபவர்களில் 90 சதவீதமம் பேர் தென் இந்தியாமற்றும் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தான். இதில் 90 சதவீதம் பேர் தோல்வியடைந்துள்ளனர்.இது எப்படி சாத்தியமாகும்?
இவர்கள் ஆங்கிலத்தில் தேர்வு எழுதியதால் அவர்களை ஒதுக்கிவிட்டு, இந்தியில் தேர்வெழுதியவர்களை மட்டும்வெற்றி பெற வைத்து வேலையும் தந்து வருகிறது தேர்வாணைம்.
இதிலிருந்தே இந்தி மாணவர்களுக்கே தேர்வாணையத்தின் தேர்வு முறையில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதுஎன்பது தெளிவாகிறது.
இந்த மொழிப் பாரபட்சத்தைத் தவிர்க்க அரசுத் தேர்வுகளை, அரசியல் சட்டம் 7வது ஷரத்தில் கூறப்பட்டுள்ள,அனைத்து தேசிய மொளிகளிலும் நடத்த வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
வட இந்திய மாணவர்களை விட தென் இந்திய மாணவர்கள் சிறப்பாகத் தேர்வு எழுதினாலும் இவர்கள்ஆங்கிலத்தில் தேர்வெழுதுவதால் இரண்டாம் தரக் குடிமகன்போல நடத்தப்படுகிறார்கள். மேலும் நேர்முகத்தேர்வில் இந்தியில் பேசினால் மட்டுமே அதிக மதிப்பெண் தரப்படுகிறது.
-
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை -
Z பாதுகாப்பை கூட நம்ப மாட்டார்? விஜய் நம்பும் ஒரே ஆள் நயீம் மூஸா! முதல்வரின் இடது கை! யார் இவர்? -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்!












Click it and Unblock the Notifications