திரிசூலம் வழங்க வரவில்லை: தொகாடியா
மதுரை:
மதுரையில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி நடத்தும் கூட்டத்தில், தொண்டர்களுக்கு திரிசூலம் வழங்கப்படமாட்டாது என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது.
பசும்பொன் கிராமத்தில் நடைபெறவுள்ள தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விஸ்வ இந்து பரிஷத்தின்துணைத் தலைவர் பிரவீன் தொகாடியாவை, பாரதீய பார்வர்ட் பிளாக் கட்சி அழைத்துள்ளது. முருகன்ஜி (!)என்பவரின் தலைமையில் இயங்கும் இந்தக் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்து சமீபத்தில்பிரிந்தது. பா.ஜ.க. ஆதரவு கட்சியாக செயல்பட்டு வருகிறது.
தொகாடியாவை தேவர் குருபூஜைக்கு வரவழைத்து, கடவுள் பக்தி கொண்ட தேவர் சமூகத்தினரை, பா.ஜ.கவுக்குஆதரவாக திருப்புவதற்காகவே இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் இந்த முயற்சிகளைமேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேவர் குருபூஜைக்கு வரும் தொகாடியா பின்னர் பாரதீய பார்வர்ட் பிளாக் மதுரையில் ஏற்பாடு செய்துள்ளகூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார். அந்தக் கூட்டத்தில் 11 பாரதிய பார்வர்ட் பிளாக் தொண்டர்களுக்குதொகாடியா திரிசூலம் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
திரிசூலம் வழங்குவதற்கும், தொகாடியா வருவதற்கும் மதுரையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்தநிகழ்ச்சி மதுரைக் கூட்டத்தில் இடம்பெறாது என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது. மேலும் இதற்குகாவல்துறையும் தடை விதித்துவிட்டது.
இந் நிலையில் மதுரை செல்லும் வழியில் இன்று சென்னை வந்த தொகாடியா விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் தேர்தல்களில் இந்து மத நம்பிக்கைகளை மதிக்கும் கட்சிகளை வி.எச்.பி.ஆதரிக்கும். இந்து நம்பிக்கைகைள கேலி செய்யும் கட்சிகளை தோற்கச் செய்வோம்.
மதுரையில் நான் திரிசூலம் வழங்க வரவில்லை. தேவர் ஜெயந்தியில் பங்க்ேவே வந்தேன். தேவர் சமூகவாக்குகளை வளைக்கவே நான் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்பதாகச் சொல்வது தவறு. எனதுவருகையில் அரசியல் உள்நோக்கமோ, மத உள்நோக்கமோ இல்லை.
அயோத்தியில் கட்டாயம் ராமர் கோவில் கட்டப்படும். அந்த இடத்தை முஸ்லீம்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்.அது தொடர்பான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
வி.எச்.பி. மாநில ஒருங்கிணைப்பாளர் வீரபாபு இதுகுறித்துக் கூறுகையில், இந்த முறை மதுரைக் கூட்டத்தில்திரிசூலம் வழங்கப்படாது. இருப்பினும் விரைவில் மதுரையில் திரிசூல விழா நடைபெறும். தேவர் குரு பூஜைநிகழ்ச்சி என்பதால் அதில் திரிசூலம் வழங்கும் நிகழ்ச்சியை இணைக்க வேண்டாம் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது என்றார்.
காவல்துறையும், மாவட்ட நிர்வாகம் திரிசூலம் வழங்குவதற்குத் தடை விதித்திருந்தாலும் கூட தொகாடியாவின்பேச்சு மூலம், ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்ற அச்சம் மதுரையில் பரவியுள்ளது.
முஸ்லீம் முன்னேற்றக் கழகம் எதிர்ப்பு:
தமிழகத்திற்குள் விஸ்வ இந்து பரிஷத் துணைத் தலைவர் பிரவீன் தொகாடியாவை அனுமதிக்கக் கூடாது என்றுதமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ளஅறிக்கையில், தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள தொகாடியா அழைக்கப்பட்டுள்ளார். மேலும், திரிசூலம்வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதனால் பெரும் பதற்றம் உண்டாகும். அமைதிப் பூங்காவாக விளங்கி வரும் தமிழகத்தைக் காக்கும் வகையில்,தொகாடியாவை தமிழகத்திற்குள்ளேயே அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளது.
வழக்கமாகவே அதிமுகவுக்கு சாதகமான தேவர் சமூகத்தினரின் வாக்குகளை பா.ஜ.கவுக்கு ஆதரவாக வளைக்கதொகாடியா முயல்வதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் திரிசூலம் வழங்கும் நிகழ்ச்சிக்கு அரசு தடைவிதித்துவிட்டதாகவும் பேசப்படுகிறது.
கைது செய்ய வேண்டும்: திருமாவளவன்
இந் நிலையில் தொகாடியாவைக் கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்திருமாவளவன் கோரியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈவிரக்கம் இல்லாத மத பயங்கரவாதியானதொகாடியா தமிழ்நாட்டுக்குள் வந்திருப்பது வேதனையாக விஷயம்.
வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் ரத்தம் குடிக்கும் மதவாதி, இப்போது தமிழகம் வந்துள்ளார். அப்பாவிதமிழர்கள் கையில் திரிசூலத்தை திணித்து பெரியாரின் பூமியை நரேந்திர மோடியின் பூமியாக மாற்றப் பார்க்கும்தொகாடியாவைக் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications