மத்திய அரசை மீறி பூமி பூஜை நடந்தது- ஜெ. பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்படவுள்ள புதிய தலைமைச் செயலகத்திற்கான பூமி பூஜைஇன்று காலை திட்டமிட்டபடி நடந்தது. முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

நகர்ப் புறங்களில் ரூ. 50 கோடிக்கு மேலான கட்டுமானத் திட்டங்கள், 1,000 ஊழியர்களுக்கும் அதிகமாகபணியாற்றும் அலுவலக வளாகங்கள் கட்டப்படுவதாக இருந்தால் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதியைப்பெற வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் இந்த தலைமைச் செயலகம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கான பூமி பூஜையைதிட்டமிட்டபடி நடத்திவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. இன்று காலை காலை 8 மணியளவில் புதிய தலைமைச்செயலகத்துக்கு அடிக்கல் நாட்டிய ஜெயலலிதா, பூமி பூஜையிலும் கலந்து கொண்டார். அமைச்சர்கள், அதிமுகஎம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

பூஜையைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 42.2 ஏக்கர் பரப்பளவில் தலைமைச் செயலகம் கட்டஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.

மத்திய அரசு உத்தரவு வரவில்லை:

மத்திய அமைச்சர் பாலுவின் வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய உத்தரவு தமிழக அரசின் தலைமைச்செயலகப் பணியை குறி வைத்தே கொண்டு வரப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இந்த உத்தரவு காரணமாக பூமி பூஜை திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவியது. ஆனால்,மத்திய அரசின் உத்தரவு தமிழக அரசுக்கு இன்னும் வரவில்லை என்றும், இதனால் பூஜை நடத்துவதில் எந்த விதிமீறலும் இல்லை எனவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு முதல்வர் ஜெயலலிதா மூத்த அமைச்சர்களுடன் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.என்ன ஆனாலும் பூஜையை நடத்திவிடுவது என்று அக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+