ஒரு மாதத்திற்கு பின் தமிழகத்துக்குள் நுழைந்த கண்ணப்பன் !
சென்னை:
என்னைக் கைது செய்வது குறித்து முதல்வர் ஜெயலலிதாதான் முடிவெடுக்க வேண்டும் என்று ஒரு மாதத்திற்குப் பின்டெல்லியிலிருந்து சென்னை வந்த மத்திய எரிசக்தித்துறை இணை அமைச்சர் கண்ணப்பன் கூறினார்.
பொடா சட்டத்தின் மூலம் கைது செய்யப்படும் சூழல் உருவானதையடுத்து டெல்லி சென்ற கண்ணப்பனைதமிழகத்துக்குச் செல்ல வேண்டாம் என பிரதமர் அறிவுறுத்தினார். பொடாவில் அவரைக் கைது செய்ய தமிழகஅரசை அனுமதிப்பதா, இல்லையா என்று முடிவு செய்யும் வரை தமிழகம் செல்ல வேண்டாம் என உத்தரவிட்டார்.
இதையடுத்து டெல்லியிலேயே தங்கியிருந்தார் கண்ணப்பன். அவரைக் கைது செய்யக் கூடாது என பிரதமர்அலுவலகத்தில் இருந்து தமிழக அரசுக்கு உத்தரவு அனுப்பப்பட்டது. ஆனாலும், கைது செய்யும் திட்டம்கைவிடப்பட்டதா, இல்லையா என்று விளக்கம் தராமல் இருந்து வருகிறது தமிழக அரசு.
இந் நிலையில் பொடா சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துவிட்ட நிலையில்,கண்ணப்பன் தமிழகம் செல்ல பிரதமர் அனுமதி அளித்தார். இதையடுத்து ஒரு மாதத்துக்குப் பின் அவர்டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கண்ணப்பன்,
பொடா கைது விவகாரம் குறித்து நான் சொன்ன விளக்கத்தை பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானி ஏற்றுக்கொண்டார்கள். என்னைக் கைது செய்வதா? வேண்டாமா? என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதாதான்முடிவெடுக்க வேண்டும்.
திருத்தம் கொண்டு வருவதால் மட்டும் பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த முடியாது என்று கூற இயலாது.தனி நபர் சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு இல்லாத நிலை இன்னும் பொடா சட்டத்தில் உள்ளது. அதனால்தான் இந்தசட்டத்தை நாங்கள் தற்போது எதிர்க்கிறோம் என்றார்.
இதையடுத்து கண்ணப்பன் இன்று காலை 10.15 மணிக்கு வேலூர் மத்திய சிறையில் வைகோவைச் சந்தித்துப்பேசினார்.
அதன் பின் வெளியே வந்த கண்ணப்பன், பொடோ சட்டம் தீவிரவாதிகளை அடக்கி ஒடுக்கவே கொண்டுவரப்பட்டது. கடந்த 91ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த ஜெயலலிதா தீவிரவாதிகளைஅடக்கி விட்டதாக அறிக்கையில் கூறி உள்ளார்.
அப்போது பொடா சட்டம் கிடையாது. சாதாரண சட்டத்தை வைத்துத்தன் ஒழித்தார். எனவே பொடாதேவையில்லை. எனவே முழுமையாக இந்த சட்டத்தை வாபஸ் பெறுவதே நல்லது என்றார் அவர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications