பசும்பொன் தேவர் சமாதியில் ஜெ. அஞ்சலி- சென்னையிலும் மாலை அணிவிப்பு
சிவகங்கை:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வர் ஜெயலலிதாபங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.
இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 96-வது பிறந்த நாள் மற்றும் 41-வது நினைவு நாளாகும்.இதையொட்டி அவர் பிறந்த பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் குருபூஜை நடக்கிறது.
முன்னதாக இன்று காலை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார். சபாநாயகர்காளிமுத்து, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந் நிகழ்ச்சியில்கலந்து கொண்டனர்.
பின்னர் தனி விமானத்தில் மதுரை சென்ற ஜெயலலிதா அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்கிராமத்துக்குச் சென்றார். அங்கு தேவர் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதே போல மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், தமிழக அமைச்சர்கள் பன்னீர் செல்வம், எம்.ராதாகிருஷ்ணன்,வைத்தியலிங்கம், விஸ்வநாதன், கடலாடி காங்கிரஸ் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் எல்.கணேசன், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, அதிமுகவை ஆதரிக்கும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், திமுகவை ஆதரிக்கும் மூ.மு.கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன் மற்றும் சிலசினிமா நடிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இவ் விழாவில் பங்கேற்க ஆயிரக்கணககான தேவர் சமூக மக்கள் அங்கு குவிந்துள்ளனர். தேவர் சிலைக்கு முன்பாகலட்சார்ச்சணை ஜபமும், பால் சங்காபிஷேகமும் நடத்தப்பட்டன.
தேவர் குருபூஜையையொட்டி, பசும்பொன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸார் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை நகரில் பல்வேறு தேவர் சமுதாய அமைப்புகளின் ஊர்வலம் இன்று மாலை நடக்கவுள்ளது.தொகாடியாவின் கூட்டமும் நடக்கிறது. இதையொட்டி மதுரையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார். சபாநாயகர் காளிமுத்து, அதிமுக கொள்கைபரப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications
