கோரிக்கையை ஏற்றார் ஜெ: வள்ளுவர் சிலைக்கு ரசாயனம் பூச உத்தரவு
சென்னை:
கன்னியாகுமரி கடலில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனப் பூச்சு பூச ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இந்த திருவள்ளுவர் சிலையை தமிழக அரசு முறையாகப் பராமரிக்கவில்லை என்று பல தரப்பில் இருந்து குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது. சிலையை வடிவமைத்த சிற்பக் கலைஞர் கணபதி ஸ்தபதியும் மனம் வருந்திபேட்டியளித்திருந்ததார்.
அதில், திருவள்ளுவர் சிலையை அரசியலோடு சம்பந்தப்படுத்த வேண்டாம். அரசியல், மொழி, இனம், மதம்அனைத்திற்கும் அப்பாற்பட்ட வள்ளுவரின் சிலையை அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி பராமரிக்க தமிழக அரசுமுன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனப்பூச்சு பூசுமாறு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்துசுற்றுலாத் துறை அமைச்சர் மில்லர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரிக்கின்ற முயற்சிகள் தமிழக அரசால் எடுக்கப்படமுடியவில்லை என்பது போன்ற தோற்றத்தை கருணாநிதி உருவாக்கியிருக்கிறார். இது பற்றிய உண்மை நிலவரத்தைஎடுத்துக் கூற விரும்புகிறேன்.
அது மட்டுமல்லாமல் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனப் பூச்சு பூசுதல், சிலையைச் சுற்றி கிரானைட் கற்கள்தரைத்தளம் அமைத்தல், கழிப்பிடப் பகுதிக்குத் தேவையான தண்ணீர் வசதி, புத்தகக்கடை, காபி பார், அலுவலகஅறை, காவலர் அறை ஆகிய இடங்களில் உள்ள பழைய நிழற்கூரைகளை அகற்றி புதிய வேலைப்பாடுகளுடன்நிழற்கூரைகள் அமைத்தல்,
ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த மின்சார அமைப்புகளில் இருந்த குறைபாடுகளை அகற்றி, ஒளி விளக்குகள்அமைத்தல் ஆகியவற்றிற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.30 லட்சத்தை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதாஆணையிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications