பஸ்சில் சென்ற பெண்களின் வயிற்றை கிழித்த லாரி கம்பி: ஒருவர் பலி
நாமக்கல்:
பஸ்சில் பயணம் செய்தபோது, எதிரே வந்த லாரியில் நீட்டிக் கொண்டிருந்த இரும்புக் கம்பி பஸ்சின் ஜன்னல்வழியாக நுழைந்து, அதில் இருந்த இரு பெண்களின் வயிற்றுக்குள் புகுந்தது. இதில் ஒரு பெண் இறந்தார்.
6 மணி நேர ரண வேதனைக்குப் பின் அறுவைச் சிகிச்சை மூலம் அந்தக் கம்பி அகற்றப்பட்டு, இன்னொரு பெண்காப்பாற்றப்பட்டார்.
கேரளாவைச் சேர்ந்தவர் இந்துமதி. இவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பாலக்காடுசெல்வதற்காக நாமக்கல்லில் இருந்து அவர் பஸ்சில் சென்றார்.
நாமக்கல் மாவட்டம் சங்ககிரி அருகே பஸ் சென்றபோது எதிரே வந்த லாரி பஸ்சின் மீது உரசியது. இதில்,லாரியில் இருந்த இரும்புக் கம்பி, பஸ்சின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து இந்துமதி மற்றும் இன்னொருபெண்ணின் மீது குத்தியது.
இதில் இன்னொரு பெண் பரிதாபமாக இறந்தார். இந்துமதியின் வயிற்றைக் குத்திக் கிழித்த கம்பி அவரது இடுப்புவலியாக வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
உடனடியாக இந்துமதி தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு வயிற்றில் பாய்ந்தஇரும்புக் கம்பியை டாக்டர்கள் முதலில் வெளியே எடுத்தனர். பின்னர் வயிற்றுக்குள் புகுந்திருந்த இரும்புக்கம்பியின் துண்டுகளை சுமார் 6 மணி நேரம் போராடி அகற்றினர்.
மரணத்தின் எல்லை வரை சென்ற இந்துமதி டாக்டர்களின் திறமையான அறுவைச் சிகிச்சை காரணமாக உயிர்பிழைத்தார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications