பொடா: திமுகவின் போராட்டத்துக்கு பாஜக எதிர்ப்பு
சென்னை:
பொடா சட்டத்தை நீக்கக் கோரி திமுக நடத்த உத்தேசித்திருக்கும் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றுபாஜக கோரியுள்ளது.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு, பொடா சட்டத்தை நீக்க வேண்டும்என்று கருணாநிதி கூறியிருப்பது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.
பொடாவால் தான் கடந்த 15 மாதங்களில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சிகளுக்காகபோடப்பட்ட சட்டம் அல்ல. எனவே, பொடாவுக்கு எதிரான போராட்ட முடிவை கருணாநிதி மறுபரிசீலனை செய்யவேண்டும்.
பொடா தேவை என்பதை ஒத்துக் கொண்டு எங்களுக்கு முழு ஆதரவு தர வேண்டும் என்றார்.
பா.ஜ. க. தமிழகச் செயலாளரும், முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியுமான எச். ராஜா நிருபர்களிடம்கூறுகையில்,.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும், மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருக்கும் திமுக தன்னுடையஎதிர்ப்பை தெரிவிப்பதற்கு வேறு இடங்கள் உள்ளபோது, மக்கள் முன்னிலையில் போராட்டம் நடத்த முயற்சிப்பதுஅடிப்படையற்றது, தேவையற்றது.
பொடா சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 15 மாத காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை ஆராய்ந்து, அதன்முடிவாக பொடா மறு ஆய்வுக் குழுவிற்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் அளித்துள்ளது.
அக் குழுவும் பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதாக உறுதியளித்துள்ளது. எனவே பொடாசட்டத்தை நீக்கத் தேவையில்லை என்றார்.
பாஜக-திமுக உறவு பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், பாஜக தானாக எப்போதும் கூட்டணிக் கட்சிகளுடன்உறவை முறித்துக் கொள்ளாது. மற்றவர்கள் அவ்வாறு செய்தால், அதற்கு பாஜக பொறுப்பல்ல என்றார்.
-
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
தமிழ்நாடுக்கு எச்சரிக்கை மணி! கடனை விட மோசமானது இது.. ஒவ்வொரு வருடமும் ரூ.78,324 கோடி! -
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்.. சட்டசபையில் வெளியாகும் அறிவிப்பு? விஜய் முக்கிய மீட்டிங் -
சட்டஒழுங்கு நெருக்கடி.. உள்துறையை விட்டுக் கொடுக்கிறாரா முதல்வர் விஜய்? கைமாறும் போலீஸ் கண்ட்ரோல்? -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..! -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
விஜய்க்கு விஷால் கொடுத்த வித்தியாசமான பரிசு.. கையில் கவனிச்சீங்களா? இது பலருக்கு பாடம் -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications