சென்னை விமான நிலையத்தில் லஞ்சம்: கஸ்டம்ஸ் ஊழியர் உள்பட 4 பேர் கைது- வீடுகளில் சோதனை
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்றிரவு திடீர் ரெய்ட் நடத்தி 3 பேரைக் கைது செய்தனர்.
கொரியாவிலிருந்து சுரேஷ் என்பவர் சிங்கப்பூர் வழியாக சென்னை வந்தார். ஒரு பை நிறைய பயன்படுத்தப்பட்டகம்ப்யூட்டர் உதிரிப் பாகங்களை அவர் வைத்திருந்தார். அதற்கான முறையான அனுமதியும் வாங்கியிருந்ததாகத்தெரிகிறது.
ஆனால், அவரைத் தடுத்து நிறுத்திய சுங்கத் துறை ஊழியர் தியாகராஜன் என்பவர், தனக்கு ரூ. 5,000 லஞ்சம்கொடுத்தால்தான் உதிரிப் பாகங்கள் உள்ள லக்கேஜை வெளியே அனுப்ப முடியும் என்று கூறியுள்ளார்.
தன்னிடம் கையில் அவ்வளவு பணம் இல்லை என்றும், வீட்டில் தான் பணம் இருப்பதாகவும் சுரேஷ் கூறியுள்ளார்.இதையடுத்து ஒரு ஆட்டோ டிரைவரை அழைத்த தியாகராஜன், சுரேஷுடன் சென்று பணத்தை வாங்கி வரும்படிபணித்துள்ளார். இதையடுத்து ஆட்டோவில் சென்ற சுரேஷ் பணத்தை எடுத்து வந்து தியாகராஜனிடம்கொடுத்துள்ளார்.
பின்னர் நேராக சிபிஐ அலுவலகம் சென்ற சுரேஷ் இதுதொடர்பாக புகார் கொடுத்தார். இதையடுத்து சிபிஐஅதிகாரிகள் குழு உடனடியாக விமான நிலையம் விரைந்தது. ஆட்டோ டிரைவர் விமான நிலையம் திரும்புவதற்குமுன்பாகவே சிபிஐ குழு அங்கு சென்றுவிட்டது.
சுரேஷ் கொடுத்த பணம் எப்படி கை மாறுகிறது என்பதை அந்தக் குழு கண்காணித்தது.
சுரேஷ் கொடுத்த பணத்தை ஆட்டோ டிரைவர் ராஜேந்திரன் சுங்கத் துறை ஊழியர் தியாகராஜனிடம் கொடுத்தார்.லஞ்சப் பணத்தை யிைல் வைத்திருப்பது ஆபத்து என்பதால் அதை அவர் துப்புரவுப் பணியாளர் செல்வம்என்பவரிடம் அதைக் கொடுத்தார்.
அவர், அதை டெலிபோன் பூத் ஆபரேட்டர் லோகேஸ்வரியிடம் கொடுத்தார். அப்போது சிபிஐ அதிகாரிகள்விரைந்து சென்று அந்தப் பணத்தை பறிமுதல் செய்து தியாகராஜன், துப்புறவுத் தொழிலாளி, ஆட்டோ டிரைவர்மற்றும் டெலிபோன் பூத் ஆபரேட்டர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
தினமும் இவ்வாறு வரும் லஞ்சப் பணத்தை டெலிபோன் பூத் ஆபரேட்டரிடம் சேர்த்து வைக்கும் தியாகராஜன்,பின்னர் வீட்டுக்குச் செல்லும்போது அதை கலெக்ட் செய்து கொண்டு போவார். இதில் துப்புறவுத் தொழிலாளிக்கும்டெலிபோன் பூத்காரருக்கும் கொஞ்சம் கமிஷன் கிடைக்கும்.
தியாகராஜனைப் போல பெரும்பாலான சுங்கத்துறை அதிகாரிகளும் இதுபோல ஏதாவது ஒரு கடை, பூத், அல்லதுபுரோக்கர் வசம் பணத்தை ஒப்படைத்து வைப்பது வழக்கம்.
சுங்க ஊழியர்கள் வீடுகளில் சோதனை:
டெலிபோன் பூத் ஆபரேட்டர் லோகேஸ்வரி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்றிரவு சிபிஐஅதிகாரிகள் 3 சுங்கத்துறை அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் என்ன கைப்பற்றப்பட்டதுஎன்று தெரியவில்லை. இன்றும் சிலரது வீடுகளின் சோதனை நடக்கிறது. ஆனால், விவரத்தை வெளியிட சிபிஐமறுத்துவிட்டது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications