இந்து முன்னணி தொண்டர் கொலை வழக்கு: 6 அல்-உம்மாவினர் விடுதலை
சென்னை:
கோவையில் கடந்த 1997ம் ஆண்டு இந்து முன்னணித் தொண்டர் ஒருவரைக் கொன்ற வழக்கில் கைதுசெய்யப்பட்ட அல்-உம்மாவைச் சேர்ந்த 6 பேரை சென்னை உயர்நீதிமன்றம் நிரபராதிகள் என்று அறிவித்துவிடுதலை செய்தது.
கோவை, குனியத்தூர் பகுதியில், கடந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி டெய்லர் ராஜேந்திரன் என்பவர்படுகொலை செய்யப்பட்டர். இவர் இந்து முன்னணி அமைப்பின் தீவிர தொண்டர் ஆவார்.
இவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஜா உசேன், அக்பர் அலி, சுதிர் பாவு என்ற கதிர், ஷாகுல் அகமது ,பஷீர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அனைவரும் முஸ்லீம் அடிப்படைவாதிகள் என்று போலீஸார்குற்றம் சாட்டி, இவர்கள் மீது கோவை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அங்கு 6 பேருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை பரிசீலித்தநீதிபதிகள் வெங்கடாச்சல மூர்த்தி, சர்தார் ஜக்காயா உசேன் ஆகியோர் கொண்ட பெஞ்ச், அரசுத்தரப்பில் 6 பேர்மீதான குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை.
6 பேரும் குண்டர்கள், அடிப்படைவாதிகள் என்ற குற்றச்சாட்டு ஏற்கும்படியாக இல்லை. மேலும், இதைநம்பும்படியாக ஒரு சாட்சியும் இல்லை. எனவே 6 பேரும் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள் என்று கருதிவிடுதலை செய்வதாக அறிவித்தனர்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications