எஸ்.ஆர்.பிக்கு மறதி அதிகமாகிவிட்டது: இளங்கோவன் பதிலடி
சென்னை:
சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திற்கு வயதாகி விட்டதால் மறதியும் அதிகமாகி விட்டது.காங்கிரஸ் கட்சியின் நடைமுறைகள் தெரியாமல் அவர் பேசி வருகிறார் என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன் கடுமையாக தாக்கியுள்ளார்.
ஜெயலலிதாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டிய இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு கட்சித் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம், தமிழக காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிமோதலை பெரிதுபடுத்தியுள்ளது.
இளங்கோவன் நெருக்குதல் தந்ததாலேயே சோ.பா. அந்த நோட்டீஸை அனுப்பினார். இதையடுத்து வாசன்ஆதரவாளர்களும், இளங்கோவன் ஆதரவாளர்களும் போட்டி போட்டு பேட்டி கொடுத்து மோதி வருகின்றனர்.
நேற்று சட்டசபை காங்கிரஸ் தலைவரும் வாசன் கோஷ்டி பிரமுகருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்பேட்டியளிக்கையில், செயல் தலைவர் என்ற சட்ட விரோத பதவியில் உள்ள இளங்கோவன், காங்கிரஸ்எம்.எல்.ஏக்களுக்கு நோட்டிஸ் அனுப்புவது குறித்துப் பேச எந்த அதிகாரமும் கிடையாது என்று கூறியிருந்தார்.
இன்று இளங்கோவன் அதற்கு கடுமையாக பதிலளித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது சாதாரண விஷயம். இதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்றுதெரியவில்லை. எம்.எல்.ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சித் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது.
நான் செயல் தலைவராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று எஸ்.ஆர்.பி கூறுவது வேடிக்கையாகஉள்ளது. சில காலம் அவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை. வேறு கட்சியில் (மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ்)இருந்தார். அங்கு இருந்த காரணத்தால், காங்கிரஸ் கட்சியின் நடைமுறைகளை அவர் மறந்து போயிருக்கலாம்.அவருக்கு வயதாகி விட்டதால் மறதியும் வந்து விட்டது.
அகில இந்திய அளவில் கமலாபதி திரிபாதி அவர்கள் கட்சியின் செயல் தலைவராக செயல்பட்டுள்ளார். அவர்திறம்பட செயல்பட்டதை உண்மையான காங்கிரஸார் அறிவார்கள். ஆனால் வேறு கட்சியிலிருந்து காங்கிரஸுக்குவந்ததால், இந்த நடைமுறையை எஸ்.ஆர்.பி. மறந்திருக்கலாம்.
நோட்டீஸ் கொடுக்கப்பட்ட 2 எம்.எல்.ஏக்களும் சரியான முறையில் விளக்கம் அளித்தால், அது ஏற்கப்படக்கூடியதாக இருந்தால் அவர்கள் மன்னிக்கப்படுவார்கள். கட்சியில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுவார்கள்என்றார் இளங்கோவன்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications