மயூரணி கொலை வழக்கு: சோலைமலை தேவர் விடுவிப்பு
மதுரை:
இலங்கை மாணவி மயூரணி கொலை செய்யப்பட்ட வழக்கில் சோலைமலைத் தேவர் உட்பட 4 பேரை போலீசார்விடுவித்துள்ளனர். மாணவன் பாலபிரசன்னாவை மட்டும் முக்கிய குற்றவாளியாக போலீசார் சேர்த்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை அண்ணாநகரில் உள்ள சோலைமலைத் தேவருக்குச் சொந்தமான கல்லூரியில் இலங்கை மாணவி மயூரணிபடித்து வந்தார். அவர் தேவரின் வீட்டு மாடியில் தான் தங்கியிருந்தார். இந் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மயூரணிகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சோலைமலைத் தேவர், அவரது மனைவி ராக்கம்மாள், மாணவர்கள் பாலபிரசன்னா, ஹாஜி அலி,வேலைக்காரன் வீரணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மயூரணி உடை மாற்றுவதை சோலைமலைைத் தேவர் மறைந்திருந்து பார்த்ததாகவும், அதைப் பார்த்த மயூரணிபிரச்சனை செய்ததால், தன் பள்ளியில் படிக்கும் பாலபிரசன்னாவைத் தூண்டிவிட்டு மயூரணியைக் கொல்லவைத்தார் தேவர் என்று முதலில் புகார் கூறப்பட்டது.
ஆனால், இந்த வழக்கு மெதுவாக தேவருக்கு ஆதரவாக திருப்பப்பட்டது. வழக்கில் இருந்து தேவரை விடுவிக்கமுயற்சி நடப்பதாக மயூரணியின் தந்தை குற்றம் சாட்டியிருந்தார். அவர் கூறியது போலவே இப்போது தேவரைஇந்தக் கொலை வழக்கில் இருந்து விடுவித்துள்ளது போலீஸ்.
இது தொடர்பாக போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கை விவரம் வருமாறு:
இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்த தியாகராஜா என்பவரின் மகள் மயூரணி (24). கம்ப்யூட்டர் படிக்கவேண்டும் என்ற ஆசையின் காரணமாக இந்தியா வந்தார். மதுரை அண்ணாநகரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்ஸிசேர்ந்தார்.
கல்லூரி நிறுவனர் வீட்டின் மாடியில் தங்கியிருந்தார். இதே வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த பிளஸ் டூமாணவர் பால பிரசன்னா, தேர்வில் முறைகேடாக அதிக மதிப்பெண் எடுக்கத் திட்டமிட்டார். அதற்காகத்தேவைப்படும் ரூ. 40,000 பணத்தை மயூரணியிடம் இருந்து கொள்ளைடிக்கவும் துணிந்தார்.
சம்பவ தினத்தன்று மாலை 3 மணிக்கு மயூரணியின் அறைக்குச் சென்ற பால பிரசன்னா உருட்டுக் கட்டையால்அவரைத் தாக்கி விட்டு, அங்கிருந்த கம்ப்யூட்டர் மற்றும் ரூ.5,000 பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்த அவர் கத்தியால் மயூரணியின் கழுத்தில் குத்தி விட்டு , தங்க நகைகளைக்கொள்ளையடித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications