புதிய தலைமை செயலகம் கட்டுவதை கைவிட இந்திய கம்யூ. கோரிக்கை
சென்னை:
பணமே இல்லை என்று கூறி அரசு ஊழியர்களின் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,மின்சாரம், பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், ரூ. 400 கோடி பணத்தில் புதிய தலைமைச் செயலகம்கட்டுவதை ஏற்கவே முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கமிட்டி கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரசின் கஜானாவில் பணம் இல்லை என்று கூறும் தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தசலுகைகளை ரத்து செய்து விட்டது, ஊதிய உயர்வு கொடுக்கவில்லை.
மின்கட்டணம், பேருந்துக் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரூ. 400 கோடி பணத்தைசெலவழித்து புதிய தலைமைச் செயலகம் கட்ட திட்டமிட்டுள்ளது ஏற்கவே முடியாதது. இந்தத் திட்டத்தைஉடனடியாக அரசு கைவிட வேண்டும்.
திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன்,இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு ஆகியோர் மீது டெஸ்மா மற்றும் எஸ்மா சட்டத்தின் கீழ்தொடரப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
கெளரவ ரேஷன் கார்டுகளால் நடுத்தர வகுப்பு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது விநியோகசேவையிலிருந்து அரசு விலகுவதையே இது காட்டுகிறது. எனவே கெளரவ கார்டு திட்டத்தை அரசு வாபஸ் பெறவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications