மீண்டும் மணிசங்கர அய்யரை தாக்க அதிமுகவினர் முயற்சி

Subscribe to Oneindia Tamil

சீர்காழி:

காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர அய்யரின் காரை அதிமுகவினர் மீண்டும் வழிமறித்து அவரைத் தாக்க முயன்றனர்.ஆனால், தக்க சமயத்தில் காங்கிரஸாரும், போலீஸாரும் வந்து அய்யரைக் காப்பாற்றி பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.

நாகப்பட்டனத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஜெயலலிதாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதையடுத்து,அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அய்யர் தனது காரில் ஊர் திரும்பினார்.

அப்போது அவரை அதிமுக தலைமைக் கழக நிர்வாகி ஓ.எஸ். மணியனுக்குச் சொந்தமான கார் வழிமறித்தது.அதிலிருந்து இறங்கிய அதிமுகவினர் மணிசங்கர் அய்யரைத் தாக்கினர். காரைக்கால் அருகே நடந்த இத்தாக்குலதையடுத்து பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மணிசங்கர அய்யர் தனது சொந்தத் தொகுதியான மயிலாடுதுறைக்கு வர வில்லை.பாண்டிச்சேரி அரசு பாதுகாப்பில் இருந்தார். இதையடுத்து டெல்லி சென்று விட்டார்.

இந் நிலையில் நேற்று மயிலாடுதுறை வந்தார். அவரது கார் சீர்காழிக்கு வந்தபோது, அய்யர் காரை அதிமுகவினர்கும்பலாக வந்து முற்றுகையிட்டனர். அய்யருக்கு எதிராகவும், அவரைக் கடுமையாக விமர்சித்தும் கோஷமிட்டனர்.சிலர் காரைத் தட்டி அதைத் திறக்க முயன்றனர்.

இதை எதிர்பார்த்த உள்ளூர் காங்கிரஸார் உடனடியாக ஏராளமான அளவில் திரண்டு வந்து காரைமுற்றுகையிட்டிருந்த அதிமுகவினரை தளளிவிட்டனர். இதையடுத்து கலவரம் வெடிக்கும் சூழல் உருவானது. இந்நிலையில் போலீஸார் அங்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் விலக்கிவிட்டு பாதுகாப்புடன் அய்யரைமயிலாடுதுறைக்கு அழைத்துச் சென்றனர்.

போலீசாரின் தலையீட்டால் பெரும் மோதலும், அய்யர் மீண்டும் தாக்கப்படுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது. தனக்குமத்திய அரசு பாதுகாப்பு வேண்டாம் என்று கூறிவிட்ட அய்யர், தமிழக அரசு தான் பாதுகாப்பளிக்க வேண்டும்என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+