அதிமுக தேர்தல்: அடிதடி, செருப்பு வீச்சு, மண்டைகள்- கார்கள் உடைப்பு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

Policemen controlling over Admk men clash in Tuticorin

தூத்துக்குடியில் மோதலில் ஈடுபட்ட அதிமுகவினரை சமாதானப்படுத்தும் போலீஸ்
மாநிலம் முழுவதிலும் நடந்து வரும் அதிமுக கிளைக்கழகத் தேர்தலில் ஆங்காங்கே அதிமுகவினர் இடையே பெரும்மோதல் நடந்து வருகிறது.

தூத்துக்குடியிலும், கோயம்புத்தூரிலும் ஏற்பட்ட கோஷ்டி மோதல் அடிதடியாக மாறிரத்தக் களறியில் முடிந்தது.

அதிமுக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக தமிழகம் முழுவதும் கிளைக்கழகத் தேர்தல்கள் நடந்துவருகின்றன.

தூத்துக்குடியிலும், கோயம்புத்தூரிலும் நடந்த தேர்தலில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது.கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரும் தாக்கப்பட்டனர். அவர்களது வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

தூத்துக்குடியில் 51 வது வார்டுக்கான தேர்தலில் போட்டியிட 10 பேர் வேட்பு மனுக்களை வாங்கினர். ஒவ்வொருவார்டுக்கும் செயலாளர், பொருளாளர் உட்பட 9 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன்படி தூத்துக்குடிக்கு 51வார்டுகளுக்கும் தலா 9 பேர் வீதம் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இதில் கடும் பேட்டி நிலவியது.

வட்டச் செயலாளர் தேர்தல் நடந்து முடிந்தால்தான் நகர செயலாளர் தேர்தல் நடக்கும் என்பதால் தூத்துக்குடி நகரசெயலாளர் தேர்தலில் போட்டியிட உள்ள அமிர்தகணேசன் தலைமையில் ஒரு கோஷ்டியினரும், நகர எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எட்டாத்துரை தலைமையில் ஒரு கோஷ்டியும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டது.

9 வது வார்டில் வட்ட செயலாளர் பதவிக்கு கவுன்சிலர் செண்பகசெல்வனும், சத்தியாஞானராஜூம் மனுத்தாக்கல்செய்ததால் இரு கோஷ்டியினருக்கும் மோதல் ஏற்பட்டு நடுரோட்டில் சண்டை நடந்தது. வேட்டி, சட்டைகள்கிழிந்ததோடு சிலருக்கு முகம், உதடு எல்லாம் பிய்ந்து ரத்தம் கொட்டியது. காவல் துறையினர் அவர்களைசமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதேபோல 47 வது வார்டுக்கு கவுன்சிலர் ராமகிருஷ்ணன் மனுத்தாக்கல் செய்ய வந்த போது அவரை சிலஅதிமுகவினர் அடித்து புரட்டி எடுத்தனர். சில கார்களும் நொறுக்கப்பட்டன.

கோவையில்...

அதே போல கோயம்புத்தூரிலும் அதிமுகவினர் இடையே மோதல் நடந்தது. செருப்புகள் பறந்ததோடு சிலரின்மண்டையும் உடைக்கப்பட்டது. இதனால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

கோயம்புத்தூரை அடுத்த குனியமுத்தூர் பேரூராட்சியின் 21 வார்டுகளுக்கான அதிமுக கிளைத் தேர்தல் காலைதொடங்கியது.

குறிச்சி பேரூராட்சி 1 வது வார்டுக்கு சேவியர் என்பவர் அதிமுகவினருடன் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார்.அப்போது அவரை எதிர்த்துப் போட்டியிடும் ரகுமான் 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் புடைசூழ வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்தார்.

அப்போது இரு குழுவினரிடையே வாக்குவாதம் முற்றி அடிதடியில் முடிந்தது. செருப்பு வீச்சும், மண்டைஉடைப்பும் அரங்கேறியது. தேர்தல் நடக்கும் இடம் ரத்தகளரியானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுவேட்புமனுத் தாக்கல் நிறுத்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+