பஸ் ஸ்டாப்பிற்குள் பாய்ந்த டேங்கர் லாரி!
சென்னை:
சென்னை கே.கே.நகர் பகுதியில் தாறுமாறான வேகத்தில் வந்த டேங்கர் லாரி, பஸ் ஸ்டாப்பிற்குள் புகுந்து,கூரையை தகர்த்தது. இதில் பஸ்சுக்காக காத்திருந்த ஒருவர் படுகாயமடைந்தார்.
சென்னை நகரில் தண்ணீர் ஏற்றி வரும் டேங்கர் லாரிகளின் தொல்லை தாள முடியவில்லை. சாலைகளில்நிம்மதியுடன் வாகனங்களில் செல்ல முடியவில்லை. அந்த லாரி வந்தாலே சாலையோரம் நடக்கக் கூட மக்கள்அஞ்சுகின்றனர்.
தமிழகத்தில் தினசரி சராசரியாக 2 பேர் வரை டேங்கர் லாரிகளில் அடிபட்டு இறப்பது வாடிக்கையாகி விட்டது.இந் நிலையில் நேற்று பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
கே.கே.நகர், பி.டி.ராஜன் சாலையில் தண்ணீர் லாரி ஒன்று படு வேகமாக வந்து கொண்டிருந்தது. அதன் வேகத்தைப்பார்த்த அப் பகுதிவாசிகள் யார் மீது மோதப் போகிறதோ என்று பயத்துடன் அலறி ஓடினர். தாறுமாறாக ஓடியஅந்த லாரி சாலையோரம் இருந்த பஸ் நிறுத்தத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பஸ் நிறுத்தக் கூரை இடிந்து, பெயர்ந்து விழுந்தது. அங்கு பஸ்சுக்காக காத்திருந்த ஜோதி மணி என்பவர்படுகாயமடைந்தார்.
லாரி மோதிய பஸ் நிறுத்தக் கூரை பாழடைந்து இருந்ததால், அதன் கீழ் நிற்காமல் அருகில் உள்ள புதிய பஸ்நிறுத்தத்தில் தான் பெரும்பாலான பயணிகள் காத்திருந்தனர். இதனால் பெரும் உயிழப்பு தவிர்க்கப்பட்டது.
மோதிய உடனேயே லாரி டிரைவரும், கிளீனரும் தப்பி ஓடி விட்டனர். கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications