தலைமை செயலக விவகாரம்: டெல்லிக்கு குழுவை அனுப்ப தமிழக அரசு திட்டம்
சென்னை:
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு இடைஞ்சலாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் டி.ஆர். பாலுபிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக பிற மாநில முதல்வர்களின் ஆதரவைத் திரட்டவும், நீதிமன்றத்தில் வழக்குத்தொடரவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
ரூ. 50 கோடிக்கு அதிகமான மதிப்பில் கட்டடம் கட்டினாலோ, ஆயிரம் பேர் மேல் வேலை செய்யும் இடத்தைக்கட்டினாலோ மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும் என பாலு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவு புதிய தலைமைச் செயலகம் கட்டுவதைத் தடை செய்யவே பிறக்கப்பட்டதாக தமிழக முதல்வர்ஜெயலலிதா கருதுகிறார். இதற்கு எதிராக மற்ற மாநில அரசுகளின் ஆதரவைப் பெற ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளார்.
இந்த உத்தரவால் மாநிலங்களின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் என்று ஹை-லைட் செய்து பிற மாநிலமுதல்வர்களுக்கு கடிதம் எழுத திட்டமிட்டுள்ளார். ராணி மேரிக் கல்லூரியை இடிப்பதை எதிர்த்து பாரம்பரியகட்டடங்கள் பாதுகாப்பு உத்தரவை பாலு பிறப்பித்தபோதும் இதே போன்ற கடிதத்தை ஜெயலலிதா அனைத்துமாநில முதல்வர்களுக்கும் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
பாலுவின் உத்தரவுக்கு மத்திய அரசிடம் நேரில் எதிர்ப்பு தெரிவிக்க உயர் அதிகாரிகள் குழுவை டெல்லிக்குஅனுப்பவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
அதே நேரத்தில் புதிய தலைமைச் செயலகத்துக்கான வரைபடத்தை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின்ஒப்புதலுக்கு அனுப்புவது என்றும் பாலு அனுமதி தராவிட்டால் நீதிமன்றத்தை நாடுவது என்றும் ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளார்.
பாலுவின் உத்தரவுக்கு இடைக்கால நீதிமன்றத் தடையையப் பெற்று விட்டால், வழக்கின் விசாரணையைமுடிப்பதற்குள் புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணியை தொடங்கிவிட முடியும் என முதல்வர்கருதுவதாகத் தெரிகிறது.
டி.ஆர். பாலுவின் உத்தரவை எதிர்ப்பதில் ஜெயலலிதாவுக்கு ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் முழு ஆதரவுதெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பட்நாயக்கின் கட்சி மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications