சட்டசபையிலிருந்து திமுக எம்.எல்.ஏக்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்
சென்னை:
சட்டசபையில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, திமுகஎம்.எல்.ஏக்கள் அனைவரும் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, திமுக உறுப்பினர் வேலு எழுந்து, விவசாயிகளுக்கு இலவசமின்சாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, விவசாயிளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும்,சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ. 2,500 கோடி அளவுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது.
மேலும் 85 சதவீத விவசாயிகள் மின் கட்டணத்தை செலுத்தி விட்டார்கள். மீதமுள்ளவர்களுக்கு கால அவகாசமும்கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து வேலு பேசுகையில், திமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம்வழங்கப்பட்டு வந்தது குறித்துக் குறிப்பிட்டார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா எழுந்து திமுகவுக்கு எதிராக சில கருத்துக்களைத் தெரிவித்தார். திமுக ஆட்சிகுறித்தும் மிகக் கடுமையாக குற்றம் சாட்டிப் பேசினார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துப் பேசினர். அரசையும் அதிமுகவையும் அவர்கள்விமர்சித்துப் பேசினர்.
இந் நிலையில் அவர்கள் பேசிய அனைத்தையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக சபாநாயகர் காளிமுத்துஅறிவித்தார்.
இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக உறுப்பினர்களை அமைதியாக உட்காறுமாறு காளிமுத்து கூறினார்.ஆனால், திமுகவினர் அதிமுக ஆட்சிக்கு எதிராக கோஷமிடத் தொடங்கினார். பதிலுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களும்கோஷம் போட்டனர்.
இதையடுத்து திமுகவினரை அவையிலிருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்கு காளிமுத்து உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து அவைக் காவலர்கள் திமுக உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறினர்.
அதைக் கேட்காமல் திமுகவினர் தொடர்ந்து கோஷம் போடவே அவர்களை காவலர்கள் தள்ளிச் சென்று வெளியேவிட்டனர். மேலும் சிலரை குண்டுக் கட்டாக தூக்கிக் கொண்டு வந்து வந்து வெளியே விட்டனர்.
தூக்கிச் செல்லப்பட்டபோதும் கூட திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி இருந்தனர்.
திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ், பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிஉறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். இந்தச் சம்பவங்களால் இன்றுஅவை அமளி துமளியாகக் காட்சியளித்தது.
மதுவிலக்கு சட்ட மசோதா: ஓ.பி. தாக்கல்
இந் நிலையில் இன்று சட்டமன்றத்தில், சில்லரை மதுபான விற்பனையை அரசே மேற்கொள்வது தொடர்பான மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதாவை பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
சமீபத்தில் மது பான விற்பனையை அரசே ஏற்கும் வகையில் புதிய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி,தமிழ்நாட்டில் மது பானங்ளின் சில்லரை விற்பனையை கூட்டுறவுத் துறை மூலம் அரசே மேற்கொள்ளும் என்றுஅறிவிக்கப்பட்டது.
தற்போது அது தொடர்பான புதிய மது விலக்கு சட்டத் திருத்த மசோதாவை பன்னீர் செல்வம் இன்று தாக்கல்செய்தார். கள்ளச் சாராயத்தை ஒழிக்கவும், சில்லரை மது பான விற்பனையில் நடந்து வரும் முறைகேடுகளைஒழிக்கவுமே இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications