மக்களைவை தேர்தல்: அத்வானி- நாயுடு தீவிர ஆலோசனை
ஹைதராபாத்:
ஆந்திர மாநில சட்டசபைக்கும் முன் கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து துணைப் பிரதமர் அத்வானி, பாஜகதேசியத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனைநடத்தியுள்ளனர்.
ஹைதராபாத்தில் தனது இல்லத்தில் சந்திரபாபு நாயுடு அளித்த விருந்தின்போது இந்த ஆலோசனை நடந்தது. தன்மீது நக்சல்கள் நடத்திய தாக்குதலினால், மக்களிடம் உருவாகியுள்ள அனுதாப அலையைத் தனக்குச் சாதகமாகப்பயன்படுத்திக் கொள்ள நாயுடு திட்டமிட்டுள்ளார். இதனால் சட்டசபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்தவிரும்புகிறார்.
அப்போதே மக்களவைத் தேர்தலையும் சேர்த்து நடத்த வேண்டும் என பா.ஜ.கவை அவர் வலியுறுத்தஆரம்பித்துள்ளார்.
ராஜஸ்தான், மிஜோரம், மத்தியப் பிரதேசம், சத்டீஸ்கர், டெல்லி ஆகிய 5 மாநிலங்களில் டிசம்பர் 1ம் தேதிசட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இவற்றில் ராஜஸ்தான், டெல்லியில் காங்கிரஸூம் மத்தியப் பிரதேசத்தில்பாஜகவும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அடுத்து மக்களவைத் தேர்தல் நடந்தால் காங்கிரசுக்கு சில இடங்கள் கூடுதலாகக் கிடைக்கலாம் என்றும்பா.ஜ.கவுக்கு சில இடங்கள் குறையலாம் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இந்த இரு கட்சிகளுக்கும்தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.
மாநிலக் கட்சிகள் தான் மிக அதிகமாக இடங்களைப் பிடிக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றனர். இதனால்தேர்தலை முன்கூட்டி நடத்த பா.ஜ.க. விரும்பவில்லை. இந்த விஷயத்தில் நாயுடுவின் கோரிக்கையை ஏற்கமுடியாத நிலையில் பா.ஜ.க. உள்ளது. நாயுடுவை நேரில் சந்தித்த அத்வானி முன் கூட்டியே தேர்தல் நடத்துவதால்பலன் இல்லை என்று கூறிவிட்டதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில இடங்கள் குறைந்தால் பா.ஜ.கவால் ஆட்சி அமைக்க முடியாது என்று கருதும் பாதுகாப்பு அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டஸ் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து தனது தலைமையில் ஆட்சி அமைக்க இப்போதே காய்நகர்த்த ஆரம்பித்துள்ளார்.
தனது சமதாக் கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைத்துள்ளார். மேலும் மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக்,ஓம் பிரகாஷ் செளதாலா, உமர் பாரூக் ஆகியோருடன் இணைந்து கூட்டணிக்குள் சிறிய அணி அமைக்கபெர்னாண்டஸ் முயற்சிப்பது போல் தெரிகிறது.
இதன் மூலம் அடுத்த பிரதமர் பதவிக்கு அவர் குறி வைப்பதாக பா.ஜ.க. கருதுகிறது. காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்நிலை ஏற்பட்டால் தனக்கு பா.ஜ.கவின் ஆதரவும் தேடி வரும் என பெர்னாண்டஸ் நினைக்கிறார்.
பொடாவை ரத்து செய்ய வேண்டும் என்று திமுகவும், மதிமுகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. காலக்கெடுஎதுவும் விதிக்காவிட்டாலும் வைகோவின் விடுதலைக்கு மத்திய அரசு என்ன முயற்சிகளை எடுக்கிறது என்பதைப்பொறுத்தே இக் கட்சிகளின் நிலை அமையும்.
அதே நேரத்தில் தங்களுக்கு முழு ஆதரவாக நிற்பது சந்திரபாபு நாயுடு மட்டுமே என்று நினைக்கும் பா.ஜ.க.தலைவர்கள், தேர்தலுக்குப் பின் அதிமுக போன்ற கட்சிகளை அவாரல் மட்டுமே பா.ஜ.கவுக்கு ஆதரவாகத் திருப்பமுடியும் என்றும் நம்புகின்றனர்.
மக்களவைத் தேர்தல் குறித்து நாயுடுவுடன் பிரதமரும் விரைவில் தனியே ஆலோசனை நடத்துவார் என்றும்கூறப்படுகிறது.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications