யாரையும் சாடாதீர்: இளங்கோவனுக்கு சோ.பா. கண்டிப்பு
சென்னை:
கட்சி விவகாரம் குறித்துப் பத்திரிக்கையாளர்களிடம் கடுமையாகக் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று காங்கிரஸ்செயல் தலைவர் இளங்கோவனுக்கு, தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கண்டிப்புடன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவனை, உள்கட்சி விவகாரம் குறித்தும், நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளஎம்.எல்.ஏக்கள் குறித்தும், சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் குறித்தும் பத்திரிக்கைகளிடம்கடுமையாகக் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று, கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கண்டித்துள்ளார்.
ஜெயலலிதாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியது தொடர்பாக இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்குக் கட்சித்தலைவர் சோ.பாலகிருஷ்ணன் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இது கோஷ்டி மோதலை மேலும் வலுவாக்கிவிட்டது.
ஜி.கே.வாசனும், இளங்கோவனும் அறிக்கைப் போரில் இறங்கினர். சட்டசபை காங்கிரஸ் தலைவர்எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், சோ.பாலகிருஷ்ணனின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தார். அப்படியேஇளங்கோவனையும் சாடினார்.
இதைத் தொடர்ந்து இளங்கோவனும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தைக் கடுமையாக விமர்சித்தார். விளக்கம்தராவிட்டால் எம்.எல்.ஏக்கள் இருவரும் தூக்கி எறியப்படுவார்கள் என்றும் கூறினார். இதனால் கட்சிக்குள்சலசலப்பு ஏற்பட்டது.
இந் நிலையில், சோ.பாலகிருஷ்ணன், இளங்கோவனுக்கு ஒரு விடுத்துள்ள வேண்டுகோளில்
எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் இரண்டு எம்.எல்.ஏக்களுக்கு எதிராக இளங்கோவன் கூறிய கடுமையானவார்த்தைகள் அவர்களது மனதைப் புண்படுத்தி விட்டன. கட்சிக்குள் மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது.
சம்பந்தப்பட்ட இரண்டு எம்.எல்.ஏக்களும் ஜெயலலிதா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பதுதெளிவாகியுள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.
எனவே, இனிமேல், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் குறித்தோ, இரண்டு எம்.எல்.ஏக்கள் குறித்தோ, உட்கட்சிவிவகாரங்கள் குறித்தோ, பத்திரிகைகளிடத்திலோ, தொலைக்காட்சிக்கோ பேட்டி அளிக்க வேண்டாம் எனஇளங்கோவனைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications