டி.ஆர்.பாலுவின் உத்தரவு: முதல்வர்களுக்கு ஜெயலலிதா கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரூ. 50 கோடிக்கும் மேலான கட்டுமானத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசின் முன் அனுமதி பெறவேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து அனைத்து மாநிலமுதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

மாநிலங்களில் ரூ. 50 கோடிக்கு மேலான கட்டுமானப் பணிகள் மற்றும் 1,000 பேருக்கும் மேல் பணியாற்றும்அலுவலக வளாகங்களைக் கட்டுவதற்கு முன் மத்திய சுற்றுச்சூழல் துறையின் னுமதியைப் பெற வேண்டும் என்றுஅந்தத் துறை புதிய அரசாணையைப் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை நிறைவேற்றத் தவறும் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் பாலு எச்சரித்துள்ளார்.

ஜெயலலிதா கட்ட திட்டமிட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்தைத் தடுக்கும் வகையிலேயே இந்த புதியஅரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில் இந்த ஆணையை எதிர்க்கக் கோரிஅனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அநத்க் கடிதத்தில்,

மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்த புதிய அரசாணை,திமுகவின் திட்டமிட்ட சதி. அரசியல் உள்நோக்கம் காரணமாகவே இந்த அரசாணையை மத்திய அரசுபிறப்பித்துள்ளது.

அதிமுகவுக்கு எதிராக வன்மம் கொண்டுள்ள திமுகவைச் சேர்ந்த அமைச்சர் டி.ஆர்.பாலு தனது பதவியைமுறைகேடாகப் பயன்படுத்தி, தலைமைச் செயலகம் கட்டுவதைத் தடுக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதுபோன்ற திட்டங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றால், மாநில அரசுகளிடம் ஒருஅதிகாரமும் இல்லாத நிலை ஏற்பட்டு விடும். நகர மேம்பாட்டுத் திட்டங்களை மாநில அரசுகளினால்நிறைவேற்றவே முடியாத சூழல் ஏற்படும்.

நகர மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள பெருநகர வளர்ச்சிக் குழுமம், மாவட்ட வளர்ச்சிக் குழுமம்போன்றவை செயலற்றதாகி விடும், அர்த்தமற்றதாகி விடும்.

மத்திய அரசின் உத்தரவு அரசியல் சட்டத்தின் 243-வது பிரிவிற்கு எதிரானது.

இந்தச் சட்டத்தில் நகர வளர்ச்சி, நில முறைப்படுத்துதல், சாலைகள் அமைத்தல், பாலங்கள் அமைத்தல், குடிநீர்வினியோகம் போன்ற அடிப்படை கட்டமைப்பு பணிகளை மாநில அரசுகளே மேற்கொள்ளலாம் என்றுகூறப்பட்டுள்ளது.

ஆனால், இச் சட்டத்தில் இப்போது மத்திய அரசு தலையிட்டுள்ளது.

இந்த வரைவுத் திட்டத்திற்கு இறுதி வடிவம் கிடைத்தால் மாநில அரசுகளால் ஒரு நலத் திட்டத்தையும் செயல்படுத்தமுடியாது. எனவே இதைத் தடுக்க மத்திய அரசுக்குக் கண்டனக் கடிதம் எழுதுமாறு உங்களை அனுபுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

கடந்த முறை கடலோரப் பகுதிகளில் கட்டடங்கள் கட்டுவதற்குத் தடை விதித்து டி.ஆர்.பாலு அமைச்சகம் பிறப்பித்தஉத்தரவைக் கண்டித்தும் ஜெயலலிதா அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருந்ததுகுறிப்பிடத்தக்கது.

அப்போது சில மாநில முதல்வர்களின் ஆதரவே ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+