பொடா விவகாரம்: கருணாநிதியுடன் பெர்னாண்டஸ் சந்திப்பு- சமாதானத்தை ஏற்க திமுக மறுப்பு
சென்னை:
பொடா சட்டத்தை எதிர்த்து திமுக நடத்தத் திட்டமிட்டுள்ள போராட்டத்தை கைவிடச் செய்ய அக் கட்சியின்தலைவர் கருணாநிதியை, மத்திய பாதுகாப்பு அமைச்சரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவருமான ஜார்ஜ்பெர்னாண்டஸ் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க கருணாநிதி மறுத்து விட்டார்.
பொடா சட்டத்தை முழுமையாக வாபஸ் பெறக் கோரியும், வைகோ, நெடுமாறன், நக்கீரன் கோபால்உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் டிசம்பர் 1ம் தேதிமாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தை திமுக நடத்துகிறது.
மத்திய அரசை எதிர்த்து இப் போராட்டம் நடக்கிறது.
இந் நிலையில், நேற்று மாலை ஜார்ஜ் பெர்னாண்டஸ் திடீரென சென்னை வந்தார். நேராக கோபாலபுரத்தில் உள்ளகருணாநிதியின் வீட்டுக்குச் சென்ற அவர் கருணாநதியை சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும்மேலாக இந்த சந்திப்பு நீடித்தது.
சந்திப்புக்குப் பின்னர் தொங்கிப் போன முகத்துடன் வெளியே வந்த அவர், பொடா சட்டம் தொடர்பாக கருணாநிதிஎன்ன நிலையை மேற்கொண்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அதே நிலையில் அவர் தொடர்ந்துஉறுதியாக இருக்கிறார்.
பொடா மட்டும் குறித்து விவாதிக்க நான் வரவில்லை. பொடாவுடன் சேர்த்து பல்வேறு முக்கியப் பிரச்சினைகள்குறித்தும் கருணாநிதியுடன் விவாதித்தேன்.
உடல் நலம் காரணமாக அவரால் டெல்லிக்கு வர இயலவில்லை. இதனால், நானே பிரச்சினைகள் குறித்துவிவாதிக்க இங்கு வந்தேன்.
வைகோ நீண்ட காலமாக சிறையில் வாடுவது குறித்து கருணாநிதி கவலையுடன் உள்ளார். அவர் விடுதலை ஆவதுதாமதமாகி வருவதும் அவரைக் மிகவும் கோபப்படுத்தியுள்ளது. எனவே பொடாவை நீக்குவதை விட வேறுஒன்றும் தன்னை மகிழ்ச்சியடைய வைக்க முடியாது என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார் என்றார் பெர்னாண்டஸ்.
இச் சந்திப்புக்குப் பின் அண்ணா அறிவாலயம் வந்த கருணாநிதி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
டிசம்பர் 1ம் தேதி போராட்டத்தில், எந்த மாற்றமும் இல்லை. பொடவை நீக்கியே ஆக வேண்டும் என்றுபெர்னாண்டஸிடம் உறுதியாக கூறி விட்டேன். அதில் சிரமம் இருப்பதாக பெர்னாண்டஸ் கூறுகிறார். ஆனால்அதை என்னால் ஏற்க முடியாது.
வைகோவையும், பழ. நெடுமாறனையும், கோபாலையும் விடுதலை செய்ய எந்தவித முயற்சியும்மேற்கொள்ளப்படாதது என்னை துயரப்படுத்தி உள்ளது என்றார் கருணாநதி.
பொடாவை ரத்து செய்யாவிட்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக நீடிப்பது சாத்தியமில்லை என்றுகருணாநிதி திட்டவட்டமாக பெர்னாண்டசிடம் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
மேலும் அடுத்த தேர்தல் குறித்தும் இருவரும் பேசியுள்ளனர். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயேதனியாக ஒரு அமைக்க முயன்று வரும் பெர்னாண்டஸ் அதற்கும் திமுகவின் ஆதரவைக் கோரியதாகவும், ஆனால்கருணாநிதி எந்தவிதமான உத்தரவாதமும் தரவில்லை என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications