3 இலங்கை அமைச்சர்கள் பதவி பறிப்பு: சந்திரிகா அதிரடி
கொழும்பு:
மூன்று அமைச்சர்களின் பதவிகளை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா பறித்துள்ளார். இதனால் அமைதிப்பேச்சுவார்த்தை தொடர்பான விவகாரத்தில் பிரதமர் ரணிலுக்கும் சந்திரிகாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்மேலும் பெரிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்கே அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சந்திரிகா குமாரதுங்காவின் இந்தநடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு, உள்துறை மற்றும் தகவல் ஒலிபரபப்புத்துபறை ஆகிய துறைகளைச் சேர்ந்த 3 அமைச்சர்களின்பதவிகளையும் அவர் பறித்துள்ளார். இதற்கான காரணங்கள் அதிபர் வெளியிடவில்லை.
ஆனால், இந்த மூன்று அமைச்சர்களுடன் அதிபர் சந்திரிகாவிற்கு இருந்த நீண்ட பிணக்கு தான் பதவிப் பறிப்புக்குக்காரணம் என்று தெரிகிறது.
புலிகளுடான அமைதிப் பேச்சுவார்த்தையைக் காரணம் காட்டி நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து வருவதாகசில நாட்களுக்கு முன், பாதுகாப்புத் துறை அமைச்சர் திலக் மாரப்பனாவை சந்திரிகா கடுமையாக விமர்சனம்செய்திருந்தார். இந் நிலையில் அவர் வசம் இருந்த பாதுகாப்புத்துறை பொறுப்பை பறிக்கப்பட்டுள்ளது.
அதே போல தனது ஆதரவாளர்களின் மீதான போலீஸ் நடவடிக்கைகளுக்கு உள்துறை அமைச்சர் ஜான்அமரதுங்காவே காரணம் என்று ஒரு முறை வெளிப்படையாகவே அதிபர் குற்றம் சாட்டியிருந்தார். இதனால்அவரது உள்துறை பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
வேறொரு அமைச்சரின் பதவி பறித்தது தொடர்பாக அதிபருக்கும், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் இம்தியாஸ்பக்கீர் மார்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந் நிலையில் அவரிடம் இருந்து தகவல்துறைபறிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், திலக் மாரப்பனா தன்னிடம் இருக்கும் மற்றொரு இலாகாவான நெடுஞ்சாலைத் துறைக்குஅமைச்சராக நீடிப்பார். அதேபோல் ஜான் கிறிஸ்த்துவ மதத்துறை அமைச்சராகவும், இம்தியாஸ் அஞ்சல் மற்றும்தொலைத் தொடர்பு அமைச்சராகவும் நீடிப்பார்கள்.
பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சராக முன்னாள் போலீஸ் அதிகாரி சிரில் ஹெராடை சந்திரிகாநியமித்துள்ளார்.
புலிகளின் புதிய சமரசத் திட்டம் பற்றி அதிபர் சந்திரிகா:
இந் நிலையில் வடகிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது குறித்து விடுதலைப் புலிகள்வெளியிட்டுள்ள புதிய திட்டத்தை அதிபர் சந்திரிகா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது இலங்கையைப் இரண்டாகப் பிரிக்கும் சதிச்செயலின் முதற் படியே ஆகும். சர்வதேச நாடுகள் இந்தத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்படி இலங்கை அரசைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications