செக்ஸ் புகார் விவகாரம்- மாணவிகளுக்கு புதிய டி.சி வழங்க பழனியாண்டவர் கல்லூரிக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் 7 பேருக்கு, எந்தவித குறிப்பும் இல்லாமல் புதியஇடமாற்ற சான்றிதழ் (டி.சி) அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழனியில் உள்ள பழனியாண்டவர் மகளிர் கல்லூரிக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஆய்வுநடத்த சில மாதங்களுக்கு முன் நிபுணர் குழு வந்திருந்தது. அப்போது, அந்தக் குழுவினரை மகிழ்ச்சிப்படுத்தகல்லூரி மாணவிகள் சிலரை நிர்வாகம் தவறாக செக்சில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து கல்லூரி மாணவிகள் மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இதுகுறித்துவிசாரிக்க குழுவை அமைத்தது தமிழக அரசு. அந்தக் குழு, கல்லூரி மாணவிகள் தவறாகப் பயன்படுத்தபடவில்லைஎன்று அறிக்கை தந்தது.
இந் நிலையில், போராட்டத்திற்குத் தலைமை தாங்கியதாக கூறி 7 மாணவிகளின் டி.சியில் கடுமையான குறிப்புகளைமுதல்வர் சந்திரகாந்தா எழுதினார். அதில், இந்த மாணவிகள் போராட்டத்தை தூண்டிவிட்டதாகவும், கல்லூரிக்குகெட்ட பெயர் ஏற்படுத்தியதாகவும், மாணவிகளை தவறான வழியில் திசை திருப்பி கல்லூரிக்கு அவப் பெயரைத்தேடித் தந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து மாணவிகள் ஜெயப்பிரியா, கீர்த்தனா, அருள் மொழி, புனிதா, வாசுகி, கெளசல்யா தேவி,ஸ்ரீவித்யா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
தங்களை பழி வாங்கவே கல்லூரி நிர்வாகம் இவ்வாறு செய்துள்ளதாகவும், தங்களுக்கு புதிய டி.சி. வழங்கஉத்தரவிட வேண்டும் என்றும் இவர்கள் கோயிருந்தனர்.
இந்த மனுவை விசாத்த நீதிபதி கோவிந்தராஜன், தாங்கள் வேலை நிறுத்தத்தைத் தூண்டவில்லை என்று இந்தமாணவிகள் கூறியுள்ளனர். ஆனாலும், வேலை நிறுத்தம் நடந்ததற்காக மன்னிப்பும் கேட்டுள்ளனர். இனிமேல்இதுபோன்ற நிடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்றும் உறுதி கூறியுள்ளனர்.
மேல் படிப்பைத் தொடர அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். எனவே, இந்த மாணவிகளுக்கு எதிராக,எந்தவித கடுமையான குறிப்பும் இல்லாத, டி.சி. வழங்கப்பட வேண்டும் என்று கல்லூரிக்கு உத்தரவிடுகிறேன்என்று நீதிபதி கூறினார்.
மாணவிகள் மீது கடுமையான குறிப்புகள் எழுதிய பழனியாண்டவர் கல்லூரி முதல்வர் சந்திரகாந்தா, மதுரைமுன்னாள் ராஜ்யசபா அதிமுக எம்.பி. ராஜன் செல்லப்பாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications