காமராஜரா? அண்ணவா?: கருணாநிதி Vs
சென்னை:
தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் காரணம் காமராஜர்தான் என்று ப.சிதம்பரம் பேசியதால்தான், அதை விமர்சித்துபதிலளிக்க நேரிட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சமீபத்தில் சென்னையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் மற்றும் கோபண்ணா ஆகியோர்எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா நடந்தது.
இதில் ப.சிதம்பரம் பேசுகையில், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட காமராஜரே காரணம்என்று கூறியிருந்தார். இதற்கு விழாவிலேயே கருணாநிதி பதிலும் அளித்தார். இதற்குக் காரணம் அண்ணா தான்என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் விழா மேடையிலேயே ப.சிதம்பரத்தை, வெண்ணையில் ஊசி நுழைப்பவர் என்று கருணாநிதிகுறிப்பிட்டார்.
இதனால் ப.சிதம்பரத்தை விமர்சிக்கும் வகையில் கருணாநிதி பேசியதாக பரவலாக பேச்சு எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து, குத்தல் பேச்சு மூலமாக கருணாநிதி பல நண்பர்களை இழந்து வருகிறார் என விகடனுக்குஅளித்துள்ள பேட்டியில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில் இந்த விவகாரத்துக்கு இன்று கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக முரசொலியில்அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
ப.சிதம்பரம் தெரிவித்த கருத்தை மேடையில் இருந்த நான் மறுக்காமல் விட்டிருந்தால் அது வரலாற்று பிழையாகிவிடும் என்பதால்தான் அப்போதே பதிலளிக்க நேரிட்டது.
1967ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி சட்டசபையில், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர்சூட்டுவது தொடர்பான தீர்மானத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் முன் மொழிந்தார்.
உண்மை இப்படியிருக்க காமராஜர்தான் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படக் காரணம் என்று வரலாற்றுப்பிழையான செய்தியை ப.சிதம்பரம் கூறினார். இதன் மூலம் காமராஜர் போன்ற பெரிய மனிதர்களை வம்புக்குஇழுக்கலாமா என்பதை சுட்டிக் காட்டவே அன்றைய தினம் சிதம்பரத்தின் பேச்சை மறுத்துப் பேச நேரிட்டது என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications