புதிய தலைமைச் செயலகம்: அவசரம் கூடாது- மத்திய அரசு
டெல்லி:
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் மாநில அரசுகள் அவசரம் காட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் 43 ஏக்கர் பரப்பளவில் ரூ.450 கோடி செலவில் புதிய தலைமைச்செயலகம் கட்டத் தீர்மானித்து அதற்கான அடிக்கல்லை கடந்த 30ம் தேதி முதல்வர் ஜெயலலிதா நாட்டி, பூமிபூஜையும் நடத்தினார்.
இந்த பூஜை நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன் மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் பாலு ஒரு உத்தரவைப்பிறப்பித்தார்.
அதன்படி ரூ.50 கோடிக்கு அதிகமான நிதியிலும், 1,000 பேருக்கு மேல் வேலை செய்யும் வகையிலும், தினமும் 50ஆயிரம் லிட்டர் கழிவு நீரை வெளியேற்றும் வகையிலும் கட்டிடங்கள் கட்டுவதற்கு மத்திய சுற்றுச் சூழல் துறையின்முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நகர்ப் பகுதிகளில் ஆறுகள் மற்றும் நீர் நிலைகள் மோசமடைந்து வருவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றஉத்தரவுப்படி இந்த உத்தரவு வெளியிடப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாசடைந்த யமுனை நதியின் தூய்மைக் கேடு தொடர்பான வழக்கு கடந்த 1991ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில்நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு நிலுவையில் இருந்தாலும், மத்திய சுற்றுச் சூழல் துறை வெளியிட்டபுதிய உத்தரவுக்கான வரைவறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே,சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மாநில அரசுகள் முன் வர வேண்டும் சில மாநில அரசுகள் மத்திய அரசின் அனுமதிபெறாமல் ரூ.50 கோடிக்கு அதிகமான நிதியில் கட்டிடம் கட்டுகின்றன. இந்த விஷயத்தில் மாநில அரசுகள் அவசரம்கூடாது என்றார்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications